ஐபிஎல்லில் 150 விக்கெட்டுகள் என்ற மைல்கல்லை எட்டிய முதல் இந்திய ஃபாஸ்ட் பவுலர் என்ற சாதனையை படைத்துள்ளார் புவனேஷ்வர் குமார். 

ஐபிஎல் 15வது சீசனில் கேன் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபாரமாக விளையாடி வெற்றிகளை பெற்றுவருகிறது. முதல் 2 போட்டிகளில் தோற்றிருந்தாலும், அடுத்த 4 போட்டிகளில் தொடர் வெற்றிகளை பெற்று புள்ளி பட்டியலில் 4ம் இடத்தில் உள்ளது சன்ரைசர்ஸ் அணி.

பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் அந்த அணி நிர்ணயித்த 152 ரன்கள் என்ற இலக்கை 19வது ஓவரில் அடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் சன்ரைசர்ஸ் அணியில் ஆடும் சீனியர் ஃபாஸ்ட் பவுலரான புவனேஷ்வர் குமார் 4 ஓவர் பந்துவீசி வெறும் 22 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.

இதன்மூலம் ஐபிஎல்லில் 150 விக்கெட்டுகள் என்ற மைல்கல்லை எட்டினார் புவனேஷ்வர் குமார். ஐபிஎல்லில் 138 போட்டிகளில் ஆடி 150 விக்கெட்டுகள் என்ற மைல்கல்லை எட்டினார் புவனேஷ்வர் குமார். இதன்மூலம் ஐபிஎல்லில் 150 விக்கெட்டுகள் என்ற மைல்கல்லை எட்டிய முதல் இந்திய ஃபாஸ்ட் பவுலர் என்ற சாதனையை புவனேஷ்வர் குமார். ஐபிஎல்லில் 150 விக்கெட்டுகள் என்ற மைல்கல்லை எட்டிய 3வது ஃபாஸ்ட் பவுலர் புவனேஷ்வர் குமார் ஆவார்.

இதற்கு முன் ட்வைன் பிராவோ (174*) மற்றும் லசித் மலிங்கா (170) ஆகிய 2 ஃபாஸ்ட் பவுலர்களும் ஐபிஎல்லில் 150 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்தியுள்ளனர்.

அமித் மிஷ்ரா(166), பியூஷ் சாவ்லா(157) மற்றும் யுஸ்வேந்திர சாஹல்(151) ஆகிய இந்திய பவுலர்கள் 150 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்தியிருக்கின்றனர். ஆனால் அவர்கள் மூவருமே ஸ்பின்னர்கள். அந்தவகையில் ஐபிஎல்லில் 150 விக்கெட்டுகள் என்ற மைல்கல்லை எட்டிய முதல் இந்திய ஃபாஸ்ட் பவுலர் என்ற சாதனையை படைத்துள்ளார் புவனேஷ்வர் குமார்.