இங்கிலாந்து ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ், பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலுமே டாப் ஃபார்மில் அசத்தி, சர்வதேச கிரிக்கெட் அரங்கில் ஆதிக்கம் செலுத்திவருகிறார். 

டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என அனைத்து விதமான போட்டிகளிலும் பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்து வகையிலும் அசத்தி, ஒரு முழுமையான கிரிக்கெட் வீரராக கெத்தாக வலம்வரும் பென் ஸ்டோக்ஸ், தனது அணிக்காக அர்ப்பணிப்புடன் ஆடி வெற்றிகளை குவித்து கொடுத்துவருகிறார். 

Also Read - அடுத்தடுத்த யார்க்கரில் ஸ்டம்பை தெறிக்கவிட்ட ஷமி.. மிஸ் பண்ணாம பார்க்க வேண்டிய வீடியோ

உலக கோப்பை இறுதி போட்டியில் அபாரமாக ஆடி தனி ஒருவனாக நியூசிலாந்தை எதிர்த்து இலக்கை விரட்டி, இங்கிலாந்துக்கு முதல்முறையாக உலக கோப்பையை வென்று கொடுத்த பென் ஸ்டோக்ஸ், அடுத்ததாக, ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு போட்டியில், கடைசி விக்கெட்டுக்கு 78 ரன்களை அதிரடியாக ஆடி வெறித்தனமாக விரட்டி வெற்றியை தேடிக்கொடுத்தார். 

Also Read - அதெல்லாம் முடியாதுங்க.. தோனி விஷயத்தில் கங்குலி கறார்

தற்போது தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் அபாரமாக ஆடிவருகிறார் ஸ்டோக்ஸ். இரண்டாவது டெஸ்ட் போட்டியில், கடைசி நாள் ஆட்டத்தில் தோல்வியை தவிர்க்க கடுமையாக போராடிய தென்னாப்பிரிக்க அணியின் கடைசி 3 விக்கெட்டுகளை வீழ்த்தி இங்கிலாந்துக்கு வெற்றியை தேடிக்கொடுத்த ஸ்டோக்ஸ், நடந்துவரும் மூன்றாவது டெஸ்ட்டில் முதல் இன்னிங்ஸில் சதமடித்து அசத்தினார். 

போர்ட் எலிசபெத்தில் நடந்துவரும் மூன்றாவது டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் 120 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார் பென் ஸ்டோக்ஸ். இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 4000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டினார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 4000க்கும் அதிகமான ரன்களை அடித்துள்ள பென் ஸ்டோக்ஸ், 142 விக்கெட்டுகளை இதுவரை வீழ்த்தியுள்ளார். இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில், 4000க்கும் அதிகமான ரன்கள் மற்றும் 100க்கும் அதிகமான விக்கெட்டுகளை வீழ்த்திய ஆல்ரவுண்டர்கள் பட்டியலில் பென் ஸ்டோக்ஸ் இடம்பிடித்துள்ளார். 

Also Read - ஹர்பஜன் சிங் சாதனையை முறியடித்த குல்தீப் யாதவ்

இந்த பட்டியலில் இடம்பெறும் 7வது வீரர் பென் ஸ்டோக்ஸ் தான். கிரிக்கெட் வரலாற்றில் ஸ்டோக்ஸுக்கு முன்பாக, வெறும் 6 வீரர்கள் மட்டுமே இந்த சம்பவத்தை செய்துள்ளனர். கார்ஃபீல்டு சோபர்ஸ்(வெஸ்ட் இண்டீஸ்), இயன் போத்தம்(இங்கிலாந்து), கபில் தேவ்(இந்தியா), கார்ல் ஹூப்பர்(வெஸ்ட் இண்டீஸ்), ஜாக் காலிஸ்(தென்னாப்பிரிக்கா), டேனியல் வெட்டோரி(நியூசிலாந்து) ஆகியோருடன் பென் ஸ்டோக்ஸும் இணைந்துள்ளார்.