Asianet News TamilAsianet News Tamil

IND vs ENG: சூர்யகுமார் யாதவின் பருப்பு எங்ககிட்ட வேகாது - பென் ஸ்டோக்ஸ்

டி20 உலக கோப்பை 2வது அரையிறுதி போட்டியில் இந்தியா - இங்கிலாந்து மோதவுள்ள நிலையில், சூர்யகுமார் யாதவை அவரது வழக்கமான அபார பேட்டிங்கை ஆடவிடாமல் தடுத்துவிடுவோம் என்று இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
 

ben stokes believes england can shut down suryakumar yadav in india vs england semi final match in t20 world cup
Author
First Published Nov 9, 2022, 4:46 PM IST

டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெற்றன. இன்று சிட்னியில் நடந்துவரும் முதல் அரையிறுதி போட்டியில் நியூசிலாந்தும் பாகிஸ்தானும் ஆடிவருகின்றன.

நாளை (நவம்பர் 10) அடிலெய்டில் நடக்கும் 2வது அரையிறுதி போட்டியில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் ஆடுகின்றன. இந்த உலக கோப்பையை இந்திய அணி வெல்லும் என்ற பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. இந்த தொடரில் அந்த நம்பிக்கைக்கும் எதிர்பார்ப்புக்கும் ஏற்ப இந்திய அணி சிறப்பாக ஆடிவருகிறது.

இந்திய அணி சூப்பர் 12 சுற்றில் தென்னாப்பிரிக்காவிடம் மட்டுமே தோற்றது. பாகிஸ்தான், நெதர்லாந்து, வங்கதேசம், ஜிம்பாப்வே ஆகிய 4 அணிகளையும் வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்திய அணி இந்த உலக கோப்பையில் சிறப்பாக செயல்பட்டு வெற்றிகளை பெற பேட்டிங்கில் விராட் கோலி மற்றும் சூர்யகுமார் யாதவின் பங்களிப்புதான் முக்கிய காரணம்.

டி20 உலக கோப்பை: ஷர்ஷல் படேல் பவுலிங்கில் அடிவாங்கி மைதானத்தில் மண்டியிட்ட கோலி.! அரையிறுதிக்கு முன் பதற்றம்

கடைசி 2 போட்டிகளில் ராகுல் நன்றாக ஆடினார். ரோஹித் சர்மா, ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக் ஆகியோர் சரியாக பேட்டிங் ஆடவில்லை. விராட் கோலி மற்றும் சூர்யகுமார் யாதவ் தான் இந்தியாவிற்காக இந்த உலக கோப்பையில் சிறப்பாக பேட்டிங் ஆடிவருகின்றனர். அவர்களைத்தான் இந்திய அணி பேட்டிங்கில் அதிகம் நம்பியும் சார்ந்தும் இருக்கிறது.

குறிப்பாக சூர்யகுமார் யாதவின் அதிரடியான பேட்டிங்கால் தான் இந்திய அணியின் ஸ்கோர் வேகமாக உயர்கிறது. வித்தியாசமான ஷாட்டுகளை ஆடவல்லவர் சூர்யகுமார் யாதவ். பொதுவாக பவுலர்கள் டெத் ஓவர்களில் வீசுவதற்கென்றே சில பந்துகள் வைத்திருக்கின்றனர். ஸ்லோ யார்க்கர், ஸ்லோ அவுட் சைட் ஆஃப் யார்க்கர், ஆஃப் ஸ்டம்ப்புக்கு வெளியே பந்தை வீசுவது ஆகியவைதான் டெத் ஓவர்களில் வீசுவதற்கு பவுலர்கள் வைத்திருக்கும் ஆப்சன்கள். இந்த மாதிரியான பந்துகளை ஆடுவதற்கு பெரும்பாலான சிறந்த பேட்ஸ்மேன்களிடம் ஷாட் இல்லை. ஆனால் சூர்யகுமார் யாதவிடம் இதுமாதிரியான பந்துகளை சிக்ஸர்கள் அடிப்பதற்குக்கூட ஷாட்டுகள் உள்ளன.

மைதானத்தின் அனைத்து திசைகளிலும் பந்தை பறக்கவிடக்கூடியவர் சூர்யகுமார் யாதவ். அதனால் தான் இந்தியாவின் 360 என அழைக்கப்படுகிறார். எப்பேர்ப்பட்ட பந்தையும் ஃபீல்டர்கள் இல்லாத திசையில் பவுண்டரி அடிக்கவல்லவர். ஜிம்பாப்வேவுக்கு எதிரான போட்டியில் ஆஃப் ஸ்டம்ப்பை விட்டு விலக்கி, கிட்டத்தட்ட வைட் லைனில் வீசப்பட்ட பந்தையெல்லாம் ஃபைன் லெக் மற்றும் ஸ்கொயர் லெக் திசைகளில் சிக்ஸர்களும் பவுண்டரிகளும் அடித்தார். அதுமாதிரியான ஷாட்டுகளை அவரால் மட்டுமே ஆடமுடியும். 

இந்திய அணி இந்த உலக கோப்பையில் அரையிறுதியில் நன்றாக ஆடி, இறுதிப்போட்டிக்கு முன்னேறி, அதிலும் நன்றாக ஆடி வெற்றி பெற்று கோப்பையை வெல்ல வேண்டுமென்றால், சூர்யகுமார் யாதவ் சிறப்பாக ஆடியாக வேண்டும். அவர்தான் இப்போதைக்கு இந்திய பேட்டிங் ஆர்டரில் மிக முக்கியமான வீரர்.

அந்தவகையில், இந்திய அணியின் முக்கியமான மற்றும் அபாயகரமான வீரரான சூர்யகுமார் யாதவை அரையிறுதியில் அதிரடியாக ஆடவிடாமல் தடுப்போம் என்று பென் ஸ்டோக்ஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்திய அணியை அரையிறுதியில் வீழ்த்தி வெற்றி பெற வேண்டுமென்றால் சூர்யகுமார் யாதவை தடுக்க வேண்டும் என்பதை இங்கிலாந்து அணி மிகத்தெளிவாக உணர்ந்துள்ளது என்பதையே பென் ஸ்டோக்ஸின் கருத்து காட்டுகிறது.

டி20 உலக கோப்பை ஃபைனலில் எந்த 2 அணிகள் மோதும்..? எந்த அணி கோப்பையை வெல்லும்..? டிவில்லியர்ஸ் அதிரடி ஆருடம்

சூர்யகுமார் யாதவ் குறித்து பேசிய இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ், சூர்யகுமார் யாதவ் மிகச்சிறந்த வீரர். அபாரமான மற்றும் வித்தியாசமான ஷாட்டுகளை ஆடுகிறார். அவரது அதிரடியான பேட்டிங்கை கட்டுப்படுத்த முடியாமல் பல பவுலர்களும் அணிகளும் தடுமாறுகின்றனர். சூர்யகுமார் சிறப்பான ஃபார்மில் இருக்கிறார். ஆனால் அவரை அதிரடியாக ஆடவிடாமல் தடுக்க முயற்சிப்போம் என்று பென் ஸ்டோக்ஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios