ஐபிஎல் 14வது சீசனை இந்தியாவில் நடத்த முழுவீச்சில் நடவடிக்கை எடுத்துவருவதாக பிசிசிஐ பொருளாளர் அருண் சிங் துமால் தெரிவித்துள்ளார். 

ஐபிஎல் 13வது சீசன் கொரோனா பெருந்தொற்று காரணமாக இந்தியாவில் நடத்தப்படாமல் ஐக்கிய அரபு அமீரகத்தில் பார்வையாளர்களே இல்லாமல் நடத்தப்பட்டது. ஆனாலும் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டதே பெரிய விஷயம்.

இந்நிலையில், அடுத்த சீசனை இந்தியாவிலேயே நடத்த பிசிசிஐ முயன்றுவருகிறது. ஐபிஎல் 14வது சீசனாவது இந்தியாவில் நடக்குமா என்ற ஏக்கத்துடன் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில் 14வது சீசனுக்கான ஏலம் வரும் பிப்ரவரி 18ம் தேதி நடக்கவுள்ளது.

ஐபிஎல் 14வது சீசன் நெருங்கிக்கொண்டிருக்கும் நிலையில், அதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பிசிசிஐ பொருளாளர் அருண் சிங் துமால், ஐபிஎல்லை இந்தியாவில் நடத்துவதற்கான வேலைகளை செய்துகொண்டிருக்கிறோம். இந்த முறை இந்தியாவில் நடத்த முடியும் என்று நம்புகிறோம். இப்போதைக்கு வேற ஆப்சன் குறித்து யோசிக்கவேயில்லை. இம்முறை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்துவதை விட இந்தியாவில் நடத்துவதே சிறந்தது. பொறுமையாக இருப்போம்; நிலைமை இன்னும் மேம்படும்; இந்தியாவில் நடத்துவோம் என்று நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார் அருண் சிங் துமால்.