Asianet News TamilAsianet News Tamil

#IPL2021 வீரர்கள் பயோ பபுள் விதிகளை மீறியதுதான் கொரோனா பரவலுக்கு காரணம்..? தாதா விளக்கம்

ஐபிஎல் 14வது சீசனில் பயோ பபுளில் இருந்தும் கிரிக்கெட் வீரர்களுக்கு கொரோனா பரவியது குறித்து பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி விளக்கமளித்துள்ளார்.
 
bcci president sourav ganguly explains how covid spread in players even they were in bio bubble
Author
Chennai, First Published May 6, 2021, 10:08 PM IST

ஐபிஎல் 14வது சீசனில் பயோ பபுளில் இருந்தும் கிரிக்கெட் வீரர்களுக்கு கொரோனா பரவியது குறித்து பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி விளக்கமளித்துள்ளார்.

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் ஐபிஎல் 14வது சீசனின் பாதி லீக் சுற்று போட்டிகள் வெற்றிகரமாக நடந்த நிலையில், கேகேஆர் வீரர்கள் வருண் சக்கரவர்த்தி, சந்தீப் வாரியர், சிஎஸ்கே அணியை சேர்ந்த மூவர், டெல்லி கேபிடள்ஸ் வீரர் அமித் மிஷ்ரா மற்றும் சன்ரைசர்ஸ் வீரர் ரிதிமான் சஹா என அடுத்தடுத்து கொரோனா உறுதியானதால் ஐபிஎல் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது.

bcci president sourav ganguly explains how covid spread in players even they were in bio bubble

கொரோனா பயோ பபுளில் வீரர்கள் பாதுகாப்பாக இருந்தும் கூட  கொரோனா பரவியது. ஒருவேளை வீரர்கள் பயோ பபுளை விதிகளை மீறினரோ, அதனால் தான் கொரோனா பரவியதோ என்ற சந்தேகமும் எழுந்தது. 

இந்நிலையில், இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்த பிசிசிஐ தலைவர் கங்குலி, வீரர்கள் பயோ பபுளை மீறினர் என்று நான் நினைக்கவில்லை. அப்படியான தகவல் எதுவும் கிடைக்கவில்லை. ஆனால் எப்படி பரவியது என்று சொல்வது மிகக்கடினம் என்று கங்குலி தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios