இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளது. 3 ஒருநாள், 3 டி20 மற்றும் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. அந்த தொடர் முடிந்ததும் இந்திய அணி இந்தியாவிற்கு திரும்பியதும் அடுத்ததாக இங்கிலாந்துக்கு எதிராக ஆடுகிறது.

ஜனவரியில் இந்தியாவிற்கு வருகிறது இந்திய அணி. இங்கிலாந்தின் இந்திய சுற்றுப்பயணத்துக்கான போட்டி விவரங்களை பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார்.

அடுத்த ஆண்டு இந்தியாவில் டி20 உலக கோப்பை நடக்கவுள்ள நிலையில், இங்கிலாந்துக்கு எதிராக ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரை பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. 

இதுகுறித்து பேசிய கங்குலி, இந்தியாவிற்கு வரும் இங்கிலாந்துடன் 4 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி ஆடுகிறது. இரு அணிகளுக்கு இடையேயான தொடர் என்பதால் நடத்துவது எளிது என்பதால் எந்த சிக்கலும் இல்லை என்று கங்குலி தெரிவித்தார்.