ஐபிஎல் 15வது சீசனுக்கான விதிகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
ஐபிஎல் 15வது சீசன் வரும் 26ம் தேதி தொடங்குகிறது. இந்த சீசனில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய 2 புதிய அணிகள் களமிறங்குவதால் இந்த சீசன் மீதான எதிர்பார்ப்பு பன்மடங்கு அதிகரித்துள்ளது.
ஐபிஎல் 15வது சீசனுக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகிவரும் நிலையில், ஐபிஎல் விதிகளில் சில அதிரடியான மாற்றங்களை செய்துள்ளது பிசிசிஐ.
இதையும் படிங்க - IPL 2022: சூர்யகுமார் யாதவ் ஆடல.. மும்பை இந்தியன்ஸுக்கு பின்னடைவு
டி.ஆர்.எஸ் விதி:
அதன்படி, இதுவரை ஒரு இன்னிங்ஸுக்கு ஒரு டி.ஆர்.எஸ் அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில், இனிமேல் ஒரு இன்னிங்ஸுக்கு 2 டி.ஆர்.எஸ் ரிவியூக்களுக்கு அனுமதி வழங்கி விதியை மாற்றியமைத்துள்ளது பிசிசிஐ.
புதிய பேட்ஸ்மேன் ஸ்டிரைக் விதி:
எம்சிசி கொண்டுவந்துள்ள புதிய மாற்றமும் ஐபிஎல்லில் செயல்படுத்தப்படவுள்ளது. கேட்ச் மூலம் ஒரு வீரர் ஆட்டமிழக்கும்போது, ரன் ஓடி வீரர்கள் க்ராஸ் செய்தாலும், புதிதாக களத்திற்கு வரும் பேட்ஸ்மேன் பேட்டிங் ஆடலாம்.
இதையும் படிங்க - டெஸ்ட் கிரிக்கெட்டில் ஸ்டெய்ன், ஷேன் வார்ன் சாதனைகளை தகர்த்தெறிந்த அஷ்வின்
கொரோனா பாதிப்பால் தடைபடாமல் இருக்க விதி:
கொரோனாவால் போட்டி தடைபடாத வண்ணம் நடத்த பிசிசிஐ ஒரு முடிவெடுத்துள்ளது. அதன்படி, போட்டியில் ஆட தகுதியான 12 வீரர்கள் இருக்குபட்சத்தில் போட்டி கண்டிப்பாக நடத்தப்படும். ஒருவேளை ஒரு அணியால் கொரோனா பாதிப்பால் ஆடமுடியவில்லை என்றால், எதிரணிக்கு 2 புள்ளிகள் வழங்கப்படும்.
சூப்பர் ஓவர்:
போட்டி டை-யானால் குறிப்பிட்ட நேரத்திற்குள் சூப்பர் ஓவரை வீசமுடியவில்லை என்றல், புள்ளி பட்டியலில் எந்த அணி மேலே இருக்கிறதோ அந்த அணி தான் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும்.
