விராட் கோலி தலைமையிலான இந்திய அணி வெளிநாடுகளில் தொடர்ந்து வெற்றிகளை குவித்துவருகிறது. 

ஆஸ்திரேலியாவில் முதன்முறையாக டெஸ்ட் தொடரை வென்று அசத்திய இந்திய அணி, அதன்பின்னர் நியூசிலாந்து மண்ணில் நியூசிலாந்தை வீழ்த்தியது, உலக கோப்பையில் சிறப்பாக செயல்பட்டது, வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் ஆகிய மூன்று தொடர்களிலுமே அந்த அணியை ஒயிட்வாஷ் செய்து வென்றது என தொடர்ச்சியாக வெற்றிகளை குவித்துவருகிறது. 

எனவே வெளிநாடுகளில் இந்திய அணியின் சிறப்பான செயல்பாடுகளை அங்கீகரிக்கும் விதமாக இந்திய அணி பயிற்சியாளர்கள் மற்றும் வீரர்களுக்கு வழங்கப்பட்டுவந்த, வெளிநாட்டு தொடர்களுக்கான தினப்படி அப்படியே இரட்டிப்பாக்கி வழங்குவது என பிசிசிஐ நிர்வாகக்குழு முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இதுவரை வெளிநாட்டு தொடர்களில் வீரர்களுக்கான தினப்படியாக ரூ.8,899 வழங்கப்பட்டுவருகிறது. இந்த தொகையை அப்படியே இரட்டிப்பாக்கி, ரூ.17,799 ஆக வழங்குவது என முடிவு செய்யப்பட்டுள்ளதாக மும்பை மிரர் தெரிவித்துள்ளது.