IND vs AUS: நீங்க 2வது டெஸ்ட்டில் ஆடலாம்.. ஷ்ரேயாஸ் ஐயருக்கு க்ரீன் சிக்னல் கொடுத்த பிசிசிஐ..!
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 2வது டெஸ்ட்டில் ஷ்ரேயாஸ் ஐயர் ஆடலாம் என பிசிசிஐ மருத்துவக்குழு ஒப்புதல் அளித்துள்ளது.
இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் டிராபி தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 1-0 என தொடரில் முன்னிலை வகிக்கிறது.
2வது டெஸ்ட் போட்டி டெல்லியில் நடக்கிறது. வரும் 17ம் தேதி இந்த டெஸ்ட் போட்டி தொடங்குகிறது. இந்த போட்டிக்கான இந்திய அணியில் ஃபாஸ்ட் பவுலர் ஜெய்தேவ் உனாத்கத் விடுவிக்கப்பட்டார். ரஞ்சி டிராபி ஃபைனலுக்கு சௌராஷ்டிரா தகுதி பெற்ற நிலையில், சௌராஷ்டிரா அணியில் ஆடுவதற்காக ஜெய்தேவ் உனாத்கத் இந்திய அணியிலிருந்து விடுவிக்கப்பட்டார்.
பாபர் அசாமை தூக்கிட்டு பாகிஸ்தான் அணியின் அடுத்த கேப்டனாக இவரை நியமிங்க..! ஹசன் அலி அதிரடி
இந்நிலையில், காயம் காரணமாக முதல் டெஸ்ட்டில் ஆடிராத ஷ்ரேயாஸ் ஐயர் 2வது டெஸ்ட்டிலும் ஆடமாட்டார் என்று தகவல் வெளியானது. ஆனால், அவருக்கு பிசிசிஐ மருத்துவக்குழு ஷ்ரேயாஸ் ஐயர் 2வது டெஸ்ட்டில் ஆட ஒப்புதல் அளித்துள்ளது.
காயம் காரணமாக முதல் டெஸ்ட்டில் ஷ்ரேயாஸ் ஐயர் ஆடவில்லை. முதுகுவலியால் அவதிப்பட்ட அவர் அதற்கு சிகிச்சை பெற்று, பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடமியில் ஸ்ட்ரெந்த் & கண்டிஷனிங் பயிற்சியில் ஈடுபட்டுவந்தார். அவர் சர்வதேச கிரிக்கெட்டில் ஆடுமளவிற்கு ஃபிட்டாகிவிட்டதால், அவர் 2வது டெஸ்ட் போட்டியில் ஆடுவதற்கு பிசிசிஐ மருத்துவக்குழு ஒப்புதல் அளித்துள்ளது.
IND vs AUS: முதல் டெஸ்ட்டுக்கு முன்பே கணித்த பாண்டிங்.. கண்டுக்காம தோல்வியை தழுவிய ஆஸ்திரேலியா
இந்திய டெஸ்ட் அணியில் 5ம் வரிசை வீரராக நிரந்தர இடத்தை பிடித்துவிட்ட ஷ்ரேயாஸ் ஐயர் முதல் டெஸ்ட்டில் ஆடாததால், அவருக்கு பதிலாக களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் வெறும் 8 ரன் மட்டுமே அடித்து ஏமாற்றமளித்தார். எனவே டெஸ்ட் கிரிக்கெட்டில் அனுபவம் வாய்ந்த மற்றும் சிறப்பாக செயல்பட்டுவரும் ஷ்ரேயாஸ் ஐயர் ஃபிட்னெஸை பெற்று அணிக்கு திரும்புவது பெரிய பலமாகும்.