ஐபிஎல் 14வது சீசன் ஏப்ரல் 9ம் தேதி முதல் மே 30ம் தேதி வரை நடக்கும் என்றும், அகமதாபாத், சென்னை, பெங்களூரு, டெல்லி, கொல்கத்தா, மும்பை ஆகிய 6 நகரங்களில் நடத்தப்படும் என்றும் பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

ஐபிஎல் 13வது சீசன் கொரோனா பெருந்தொற்றுக்கு மத்தியில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்தது. ஐபிஎல் 14வது சீசனை இந்தியாவில் நடத்துகிறது பிசிசிஐ. ஐபிஎல் 14வது சீசனுக்கான ஏலம் பிப்ரவரி 18ம் தேதி நடந்தது. அனைத்து அணிகளும் ஏலத்தில் தங்களுக்கு தேவையான வீரர்களை எடுத்து, ஐபிஎல்லுக்காக தயாராக உள்ளன.

ஐபிஎல் 14வது சீசன் ஏப்ரல் 9ம் தேதி முதல் மே 30 வரை நடக்கவுள்ளதாக நேற்றைய தினம் தகவல் உறுதியான நிலையில், அதை உறுதிப்படுத்தி அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது பிசிசிஐ. ஏப்ரல் 9ம் தேதி தொடங்கும் ஐபிஎல் 14வது சீசன் மே 30ம் தேதி வரை நடக்கவுள்ளது. 

அகமதாபாத், மும்பை, சென்னை, பெங்களூரு, கொல்கத்தா, டெல்லி ஆகிய 6 நகரங்களில் ஐபிஎல் போட்டிகள் நடத்தப்படும் என பிசிசிஐ அறிவித்துள்ளது.

இன்று நடந்த ஐபிஎல் நிர்வாகக்குழு கூட்டத்திற்கு பின்னர், பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார். 

சென்னையில் நடக்கும் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகள் மோதுகின்றன. பிளே ஆஃப் மற்றும் இறுதி போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடக்கவுள்ளன.