கொரோனா அச்சுறுத்தலால் இந்தியாவிற்கு வந்திருந்த தென்னாப்பிரிக்க அணி, கிரிக்கெட் தொடரில் ஆடாமலேயே கடந்த மார்ச் மாதத்தில் தென்னாப்பிரிக்காவிற்கு திரும்பியது. அதன்பின்னர் இந்தியாவில் இதுவரை கிரிக்கெட் போட்டிகளே நடக்கவில்லை. ஐபிஎல் கூட ஐக்கிய அரபு அமீரகத்தில் தான் நடந்தது. இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியாவில் உள்ள நிலையில், ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு இந்தியா திரும்பியவுடன், இங்கிலாந்தை இந்தியாவில் எதிர்கொள்கிறது.

இங்கிலாந்து அணி இந்தியாவிற்கு வந்து 4 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. அந்த தொடருக்கான முழு போட்டி அட்டவணையையும் பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

4 டெஸ்ட் போட்டிகளில் முதல் 2 டெஸ்ட் போட்டிகள் சென்னையிலும், கடைசி 2 டெஸ்ட் போட்டிகள் அகமதாபாத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியமான சர்தார் படேல் ஸ்டேடியத்திலும் நடக்கவுள்ளது. 3வது டெஸ்ட் போட்டி பகலிரவு டெஸ்ட் போட்டியாக நடக்கவுள்ளது. அந்த டெஸ்ட் போட்டி நடக்கும்போது அகமதாபாத் ஸ்டேடியம் முழுவதும் பிங்க் நிறத்தில் ஜொலிக்கவுள்ளது. சிட்னி பிங்க் டெஸ்ட்டை போல நடத்தப்படவுள்ளது.

முதல் டெஸ்ட்: பிப்ரவரி 5-9:  சென்னை
2வது டெஸ்ட்: பிப்ரவரி 13-17 : சென்னை
3வது டெஸ்ட்: பிப்ரவரி 24-28 : அகமதாபாத்(பகலிரவு டெஸ்ட்)
4வது டெஸ்ட்: மார்ச் 4-8 : அகமதாபாத்

ஐந்து டி20 போட்டிகளுமே அகமதாபாத் சர்தார் படேல் ஸ்டேடியத்தில் தான் நடக்கவுள்ளது. மார்ச் 12, 14, 16, 18, 20 ஆகிய தேதிகளில் டி20 போட்டிகள் நடக்கவுள்ளன.

3 ஒருநாள் போட்டிகள் புனேவில் 23, 26, 28 ஆகிய தேதிகளில் புனேவில் நடக்கிறது.