Asianet News TamilAsianet News Tamil

வரலாற்றில் முக்கியமான நாள்: ரூ.4669.99 கோடியை அள்ளிக் கொடுத்த மகளிர் ஐபிஎல் கிரிக்கெட்!

இன்று நடந்த மகளிருக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் 5 அணிகளுக்கான ஏலத்தின் மூலமாக பிசிசிஐக்கு ரூ.4669.99 கோடி கிடைத்துள்ளது என்று அதன் செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.
 

BCCI announced  Womens IPL  team owners today during WIPL auction
Author
First Published Jan 25, 2023, 4:05 PM IST

முதல் முறையாக மகளிருக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான ஏலம் இன்று மும்பையில் நடந்தது. இந்த தொடரில் விளையாடும் 5 அணிகளை ஏலத்தில் எடுக்கும் முயற்சியில் மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் ஆகிய 7 அணிகள் இறங்கின. இந்த அணிகளைத் தவிர சென்னை சூப்பர் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் ஆகிய அணிகளின் உரிமையாளர்கள் டெண்டர் ஆவணத்தை வாங்கினாலும் ஐபிஎல் ஏலத்தில் நுழையவில்லை.

வேக வேகமாக முன்னேறும் சிராஜ்: ஐசிசி ஒரு நாள் போட்டி பௌர்லர்கள் தரவரிசைப் பட்டியலில் நம்பர் 1 இடம்!

இந்த 7 அணிகளின் உரிமையாளர்கள் தவிர அதானி குரூப், கேப்ரி குளோபல், அப்போலோ பைப்ஸ், அமித் லீலா எண்டர்பிரைசஸ், ஸ்ரீராம் குரூப், ஹல்டிராம்ஸ் குரூ, டோரண்ட் பார்மா, ஸ்லிங்ஷாட் 369 வென்சர்ஸ் பிரைவேட் லிமிட்டே நிறுவனங்களின் உரிமையாளர்களும் இந்த ஏலத்தில் கலந்து கொண்டனர். இந்த நிலையில், மகளிருக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் 5 அணிகளின் ஏலம் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது.

IND vs NZ: முதல் டி20 போட்டியில் களமிறங்கும் இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவன்

அதன்படி, அதானி குரூப் அகமதாபாத் அணியை ரூ.1289 கோடிக்கு எடுத்துள்ளது. மும்பை இந்தியன்ஸ் மும்பை அணியை ரூ.912.99 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ், பெங்களூரு அணியை ரூ.901 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது. டெல்லி கேபிடல்ஸ், டெல்லி அணியை ரூ.810 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது. கேப்ரி குளோபல் லக்னோ அணியை ரூ.757 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது. 

WIPL மகளிருக்கான ஐபிஎல் கிரிக்கெட்: 5 அணிகளை ஏலத்தில் எடுக்க 17 நிறுவனங்கள் போட்டி? வெற்றி பெறுவது யார்?

அதானி ஸ்போர்ட்ஸ்லைன் பிரவேட் லிமிடெட்., - அகமதாபாத் - ரூ.1289 கோடி    
இண்டியாவின் ஸ்போர்ட்ஸ் பிரைவேட் லிமிடெட்., - மும்பை - ரூ.912.99 கோடி
ராயல் சேலஞ்சர்ஸ் ஸ்போர்ஸ் பிரவேட் லிமிடெட்., - பெங்களூரு - ரூ.901 கோடி
ஜேஎஸ்டபிள்யூ ஜிஎம்ஆர் கிரிக்கெட் பிரைவேட் லிமிடெட் - டெல்லி - ரூ.810 கோடி
கேப்ரி குளோபல் ஹோல்டிங்ஸ் பிரைவேட் லிமிடெட்., - லக்னோ - ரூ.757 கோடி

இந்த ஏலம் குறித்து பிசிசிஐயின் செயலாளர் ஜெய் ஷா கூறுகையில், இது வரலாற்றில் முக்கியமான நாள். கடந்த 2008 ஆம் ஆண்டு ஆண்களுக்காக நடந்த ஐபிஎல் அணிகளுக்கான ஏலத்தின் மூலம் கிடைத்ததை விட மகளிருக்கான ஐபிஎல் ஏலம் மூலமாக பிசிசிஐக்கு ரூ.4669.99 கோடி கிடைத்துள்ளது. வெற்றியாளர்களுக்கு வாழ்த்துக்கள். இது பெண்கள் கிரிக்கெட்டில் ஒரு புரட்சியின் தொடக்கத்தைக் குறிக்கிறது மற்றும் வகுத்துள்ளது.

மகளிர் கிரிக்கெட்டுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த விளையாட்டு சகோதரத்துவத்துக்கும் ஒரு மாற்றமான பயணத்திற்கான வழி. மகளிர் பிரீமியர் லீக்கானது, மகளிர் கிரிக்கெட்டில் தேவையான சீர்திருத்தங்களை கொண்டு வரும். ஒவ்வொரு பங்குதாரருக்கும் பயன் அளிக்கும் வகையில் அனைத்து சுற்றுச்சூழல் அமைப்பையும் இது ஏற்படுத்தி தரும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. வரும் பிப்ரவரி மாதம் ஒவ்வொரு அணிக்கான வீராங்கனைகள் ஏலம் நடக்க இருக்கிறது. இதையடுத்து வரும் மார்ச் 17 ஆம் தேதி முதல் சீசனுக்கான மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மகளிருக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான உரிமத்தை வையாகாம்-18 நிறுவனம் ரூ.951 கோடிக்கு கைப்பற்றியுள்ளது. ஒவ்வொரு போட்டிக்கும் ரூ.7.09 கோடி என்று ஒட்டுமொத்தமாக 2023 முதல் 2027 ஆண்டு வரை 5 ஆண்டுகளுக்கு ரூ.951 கோடி என்று ஏலம் எடுத்துள்ளது. இந்த மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் அகமதாபாத் (நரேந்திர மோடி ஸ்டேடியம்), கொல்கத்தா (ஈடன் கார்டன் மைதானம்), சென்னை (எம் ஏ சின்னச்சாமி ஸ்டேடியம்), பெங்களூரு (எம் சின்னச்சாமி ஸ்டேடியம்), டெல்லி (அருண் ஜெட்லி ஸ்டேடியம்), கவுகாத்தி (பர்ஸ்சபரா ஸ்டேடியம்), இந்தூர் (ஹோல்கர் ஸ்டேடியம்), லக்னோ (ஏபி வாஜ்பாய் எகானா கிரிக்கெட் ஸ்டேடியம்) மற்றும் மும்பை (வாங்கடே/ப்ரபோர்ன் ஸ்டேடியம்) ஆகிய பகுதிகளில் நடக்கிறது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios