Asianet News TamilAsianet News Tamil

WIPL மகளிருக்கான ஐபிஎல் கிரிக்கெட்: 5 அணிகளை ஏலத்தில் எடுக்க 17 நிறுவனங்கள் போட்டி? வெற்றி பெறுவது யார்?

மகளிருக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் 5 அணிகளுக்கான ஏலம் இன்று மும்பையில் நடக்கிறது. 
 

Who will be win in the WIPL Bidding of Auction?
Author
First Published Jan 25, 2023, 12:15 PM IST

ஆண்டுதோறும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதங்களில் இந்தியன் பிரீமியர் லீக எனப்படி ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் முறையாக ஐபிஎல் தொடரை பிசிசிஐ அறிமுகம் செய்தது. இதுவரை ஆண்களுக்கு மட்டுமே நடத்தப்பட்டு வந்த ஐபிஎல் டி20 கிரிக்கெட் இந்த ஆண்டு முதல் முறையாக மகளிருக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடத்தப்படுகிறது. வரும் மார்ச் 17 ஆம் தேதி மகளிருக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடத்தப்பட இருக்கிறது.

மனைவி மற்றும் மகளின் பராமரிப்பு செலவுக்கு ரூ.1.30 லட்சம் கொடுக்க முகமது ஷமிக்கு கோர்ட் உத்தரவு!

இதில், பங்கேற்கும் வீராங்கனைகளுக்கான ஏலம் வரும் பிப்ரவரி மாதம் நடக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த தொடரில் மொத்தம் 5 அணிகள் பங்கேற்கின்றன. அந்த அணிகளை ஏலம் எடுக்கும் நிகழ்ச்சி இன்று பிற்பகல் 2 மணிக்கு மும்பையில் நடக்கிறது. மும்பையில் நடக்கும் ஏலத்தில் மொத்தமாக 7 ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்கள் உள்பட அதானி குரூப், கேப்ரி குளோபல், அப்போலோ பைப்ஸ், அமித் லீலா எண்டர்பிரைசஸ், ஸ்ரீராம் குரூப், ஹல்டிராம்ஸ் குரூ, டோரண்ட் பார்மா, ஸ்லிங்ஷாட் 369 வென்சர்ஸ் பிரைவேட் லிமிட்டே நிறுவனம் உள்பட மொத்தமாக 17 நிறுவனங்கள் கலந்து கொள்கின்றனர். இந்த ஏலத்தின் போது ஒவ்வொரு அணியும் ரூ.500 முதல் 600 கோடி வரையில் ஏலம் எடுக்கப்படலாம் என்று தெரிகிறது. அதிகபட்சமாக ரூ.800 கோடி வரையில் இருக்கும் என்று தெரிகிறது.

IND vs NZ: முதல் டி20 போட்டியில் களமிறங்கும் இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவன்

ஐபிஎல்லில் மொத்தமாக உள்ள 10 அணிகளில் மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் ஆகிய 7 அணிகள் மகளிர் ஐபிஎல் ஏலத்திற்கான ஆவணங்களை நேற்று சமர்ப்பித்துள்ளன. இந்த அணிகளைத் தவிர சென்னை சூப்பர் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் ஆகிய அணிகளின் உரிமையாளர்கள் டெண்டர் ஆவணத்தை வாங்கினாலும் ஐபிஎல் ஏலத்தில் நுழையவில்லை என்று சொல்லப்படுகிறது.

நியூசிலாந்தை ஒயிட்வாஷ் செய்து ஐசிசி ஒருநாள் தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேறிய இந்தியா

மகளிருக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான உரிமத்தை வையாகாம்-18 நிறுவனம் ரூ.951 கோடிக்கு கைப்பற்றியுள்ளது. ஒவ்வொரு போட்டிக்கும் ரூ.7.09 கோடி என்று ஒட்டுமொத்தமாக 2023 முதல் 2027 ஆண்டு வரை 5 ஆண்டுகளுக்கு ரூ.951 கோடி என்று ஏலம் எடுத்துள்ளது. இந்த மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் அகமதாபாத் (நரேந்திர மோடி ஸ்டேடியம்), கொல்கத்தா (ஈடன் கார்டன் மைதானம்), சென்னை (எம் ஏ சின்னச்சாமி ஸ்டேடியம்), பெங்களூரு (எம் சின்னச்சாமி ஸ்டேடியம்), டெல்லி (அருண் ஜெட்லி ஸ்டேடியம்), கவுகாத்தி (பர்ஸ்சபரா ஸ்டேடியம்), இந்தூர் (ஹோல்கர் ஸ்டேடியம்), லக்னோ (ஏபி வாஜ்பாய் எகானா கிரிக்கெட் ஸ்டேடியம்) மற்றும் மும்பை (வாங்கடே/ப்ரபோர்ன் ஸ்டேடியம்) ஆகிய பகுதிகளில் நடக்கிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios