Asianet News TamilAsianet News Tamil

இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு.! ஐபிஎல்லில் அசத்திய 3 வீரர்களுக்கு முதல் வாய்ப்பு

இங்கிலாந்துக்கு எதிரான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
 

bcci announced team india t20 squad for the series against england
Author
Chennai, First Published Feb 20, 2021, 10:14 PM IST

இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்ட், 5 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவருகிறது. முதலில் டெஸ்ட் தொடர் நடந்துவருகிறது. 2 டெஸ்ட் போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், கடைசி 2 டெஸ்ட் போட்டிகள் அகமதாபாத் சர்தார் படேல் ஸ்டேடியத்தில் நடக்கவுள்ளன.

டெஸ்ட் தொடர் முடிந்ததும் டி20 தொடர் நடக்கவுள்ளது. இந்நிலையில், டி20 தொடருக்கான 19 வீரர்களை கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. விராட் கோலி தலைமையிலான இந்திய அணியில் ரோஹித் சர்மா, ராகுல் தவான், ஷ்ரேயாஸ் ஐயர், ஹர்திக் பாண்டியா, சாஹல் ஆகிய ரெகுலர் வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

பும்ராவிற்கு டி20 தொடரில் ஓய்வளிக்கப்பட்டுள்ளது. காயத்திலிருந்து மீண்ட புவனேஷ்வர் குமார் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ஆஸி.,யில் அசத்திய நடராஜன் அணியில் உள்ளார். தீபக் சாஹர், நவ்தீப் சைனி, ஷர்துல் தாகூர் ஆகிய ஃபாஸ்ட் பவுலர்களும் அணியில் உள்ளனர். சாஹல், வாஷிங்டன் சுந்தர் ஆகிய ஸ்பின்னர்களுடன் அக்ஸர் படேல் சேர்க்கப்பட்டுள்ளார். ஆஸி., தொடருக்கான அணியில் இடம்பெற்று பின்னர் காயத்தால் வெளியேறிய தமிழகத்தை சேர்ந்த வருண் சக்கரவர்த்திக்கு மீண்டும் அணியில் வாய்ப்பு கிடைத்துள்ளது.

கடந்த ஐபிஎல் சீசனில் அபாரமாக ஆடிய ஸ்பின் ஆல்ரவுண்டர் ராகுல் டெவாட்டியா, விக்கெட் கீப்பர் இஷான் கிஷன் மற்றும் கடந்த சில ஆண்டுகளாகவே உள்நாட்டு தொடர்கள் மற்றும் ஐபிஎல்லில் அசத்திவரும் சூர்யகுமார் யாதவ் ஆகிய மூவரும் முதல் முறையாக இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்திய அணி:

விராட் கோலி(கேப்டன்), ரோஹித் சர்மா(துணை கேப்டன்), கேஎல் ராகுல், ஷிகர் தவான், ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன்(விக்கெட் கீப்பர்), சாஹல், வருண் சக்கரவர்த்தி, அக்ஸர் படேல், வாஷிங்டன் சுந்தர், ராகுல் டெவாட்டியா, நடராஜன், புவனேஷ்வர் குமார், தீபக் சாஹர், நவ்தீப் சைனி, ஷர்துல் தாகூர்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios