இந்திய அணி வெஸ்ட் இண்டீஸிற்கு சுற்றுப்பயணம் செய்து ஆடுகிறது. 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் ஆடவுள்ளது. 

வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது. தேர்வுக்குழு கூட்டத்திற்கு பின்னர் தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் அணியை அறிவித்தார். 

அடுத்த ஆண்டு டி20 உலக கோப்பை நடக்கவுள்ளதால் அதை மனதில் வைத்து அணி தேர்வு செய்யப்பட்டுள்ளது. டி20 அணியில் ரிஸ்ட் ஸ்பின் ஜோடியான குல்தீப் - சாஹல் ஆகிய இருவருக்குமே இடமளிக்கப்படவில்லை. இருவருமே ஓரங்கட்டப்பட்டுள்ளனர். 

தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணியில் 2019 ஐபிஎல் சீசனில் ஆடி கவனத்தை ஈர்த்த ராகுல் சாஹர் ஆகிய இருவருக்கும் டி20 அணியில் இடம் கிடைத்துள்ளது. பும்ராவிற்கு டி20 தொடரில் ஓய்வளிக்கப்பட்டுள்ளது. ஷமிக்கு டி20 அணியில் இடம் வழங்கப்படவில்லை. எனவே உள்ளூர் போட்டிகளிலும் ஆர்சிபி அணியிலும் அபாரமாக பந்துவீசிய நவ்தீப் சைனிக்கும் சிஎஸ்கே அணியில் ஆடி கவனத்தை ஈர்த்த தீபக் சாஹருக்கும் டி20 அணியில் இடமளிக்கப்பட்டுள்ளது. இளம் இடது கை ஃபாஸ்ட் பவுலர் கலீல் அகமதுவும் அணியில் உள்ளார். 

ஒருநாள் அணியில் இடம்பெற்றிருந்த மனீஷ் பாண்டே மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகிய இருவரும் டி20 அணியிலும் இடம்பிடித்துள்ளனர். க்ருணல் பாண்டியா, ஜடேஜா ஆகிய இரண்டு ஸ்பின் ஆல்ரவுண்டர்களும் டி20 அணியில் உள்ளனர். 

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இந்திய டி20 அணி:

விராட் கோலி(கேப்டன்), ரோஹித் சர்மா(துணை கேப்டன்), தவான், ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர், மனீஷ் பாண்டே, ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்), க்ருணல் பாண்டியா, ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், ராகுல் சாஹர், புவனேஷ்வர் குமார், கலீல் அகமது, தீபக் சாஹர், நவ்தீப் சைனி.