இந்திய அணி வெஸ்ட் இண்டீஸூக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் ஆகிய இரண்டு தொடர்களையும் வென்ற நிலையில், அடுத்ததாக இலங்கைக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர், அதற்கடுத்து ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடவுள்ளது. 

இலங்கை இந்தியாவிற்கு வந்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடுகிறது. இலங்கை அணிக்கு எதிரான தொடர் ஜனவரி 5ம் தேதி தொடங்குகிறது. ஜனவரி 5, 7 மற்றும் 10 ஆகிய தேதிகளில் முறையே கவுஹாத்தி, இந்தூர் மற்றும் புனே ஆகிய இடங்களில் மூன்று டி20 போட்டிகள் நடக்கவுள்ளன. 

இந்த தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 2019ம் ஆண்டு முழுவதும், ஒரு சில போட்டிகளை தவிர, இந்திய அணி ஆடிய அனைத்து போட்டிகளிலும் ஓய்வின்றி ஆடிய ரோஹித் சர்மாவுக்கு இலங்கை தொடரில்  ஓய்வளிக்கப்பட்டுள்ளது. காயத்தால் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ஆடமுடியாமல் போன தவானுக்கு, காயம் குணமடைந்ததால், மீண்டும் இந்திய அணியில் இணைந்துள்ளார். 

சஞ்சு சாம்சன் அணியில் எடுக்கப்பட்டுள்ளார். இதற்கு முந்தைய தொடர்களிலும் சாம்சன் அணியில் எடுக்கப்பட்டார். ஆனால் அவருக்கு ஆடும் லெவனில் இடம் கிடைக்கவில்லை. இந்த முறையாவது கிடைக்கிறதா என்று பார்ப்போம். ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட், ஷிவம் துபே, மனீஷ் பாண்டே ஆகியோரும் அணியில் உள்ளனர்.

Also Read - அடுத்த புரட்சிக்கு தயாரான தாதா.. ஐசிசி-யையே அலறவிடும் கங்குலி

ரிஸ்ட் ஸ்பின்னர்களான குல்தீப் யாதவ், சாஹல் ஆகிய இருவருமே அணியில் உள்ளனர். ஆனால் இவர்கள் இருவரும் இணைந்து போட்டியில் ஆட வாய்ப்பில்லை. ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகிய இருவரும் வழக்கம்போலவே ஸ்பின் பவுலிங் ஆல்ரவுண்டர்களாக இடம்பெற்றுள்ளனர்.  காயத்தால் கடந்த சில தொடர்களில் ஆடாத பும்ரா, மீண்டும் அணியில் இணைந்துள்ளதால், ஃபாஸ்ட் பவுலிங் யூனிட்டில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

ஷமி டி20 அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். காயத்தால் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியிலிருந்து விலகிய தீபக் சாஹரும், காயம் காரணமாக நீக்கப்பட்டுள்ளார். பும்ரா அணியில் இடம்பெற்றுள்ள நிலையில், அவருடன் ஃபாஸ்ட் பவுலர்களாக நவ்தீப் சைனியும் ஷர்துல் தாகூரும் இடம்பெற்றுள்ளனர். ஷர்துல் தாகூர், வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் சிறப்பாக பேட்டிங் ஆடியதால், அவருக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. டி20 அணியில், பேட்டிங் ஆட தெரிந்த பவுலர்களுக்கு முக்கியத்துடம் கொடுக்கப்படுவதால், ஷர்துல் தாகூருக்கு அணியில் இடம் கிடைத்துள்ளது. 

Also Read - ஷர்துல் தாகூரிடம் ஒரே ஒரு விஷயம்தான் சொன்னேன்.. வெற்றிக்கு பின் ஜடேஜா அதிரடி

இலங்கை டி20 தொடருக்கான இந்திய அணி:

விராட் கோலி(கேப்டன்), ஷிகர் தவான், கேஎல் ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர், மனீஷ் பாண்டே, சஞ்சு சாம்சன், ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்), ஷிவம் துபே, ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், சாஹல், ஷர்துல் தாகூர், நவ்தீப் சைனி, பும்ரா.