உலக கோப்பை தொடரின் இன்றைய போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் வங்கதேச அணிகள் மோதுகின்றன. 

டௌண்டனில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச கேப்டன் மஷ்ரஃபே மோர்டஸா, வெஸ்ட் இண்டீஸ் அணியை பேட்டிங் செய்ய பணித்தார். இரு அணிகளுமே இதற்கு முன்னர் தலா 4 போட்டிகளில் ஆடி ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளன. எனவே இரண்டாவது வெற்றியை பதிவு செய்யும் முனைப்பில் ஆடிவருகின்றன. 

இந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியிலிருந்து ஆல்ரவுண்டர் பிராத்வெயிட் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். அவர் பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலுமே பங்களிப்பு செய்யவில்லை. எனவே அவரை நீக்கிவிட்டு டேரன் பிராவோவை அணியில் சேர்த்துள்ளனர். 

வெஸ்ட் இண்டீஸ் அணி:

கெய்ல், லெவின், ஹோப், டேரன் பிராவோ, பூரான், ஹெட்மயர், ஹோல்டர்(கேப்டன்), ஆண்ட்ரே ரசல், கோட்ரெல், ஒஷேன் தாமஸ், கேப்ரியல். 

வங்கதேச அணி:

தமீம் இக்பால், சௌமியா சர்க்கார், ஷாகிப் அல் ஹாசன், முஷ்ஃபிகுர் ரஹீம்(விக்கெட் கீப்பர்), லிட்டன் தாஸ், மஹ்மதுல்லா, மொசாடெக் ஹுசைன், சைஃபுதீன், மஷ்ரஃபே மோர்டஸா(கேப்டன்), மெஹிடி ஹாசன், முஸ்தாஃபிசுர் ரஹ்மான்.