Asianet News TamilAsianet News Tamil

Asia Cup 2022: வங்கதேசம் - ஆஃப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை.! டாஸ் ரிப்போர்ட்

ஆசிய கோப்பையில் ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் வங்கதேச அணி  பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
 

bangladesh win toss opt to bat agianst afghanistan in asia cup 2022
Author
First Published Aug 30, 2022, 7:39 PM IST

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. முதல் போட்டியில் இலங்கையை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்ற ஆஃப்கானிஸ்தான் அணி, இன்றைய போட்டியில் வங்கதேசத்தை எதிர்கொள்கிறது.

வங்கதேசம் - ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இந்த போட்டி ஷார்ஜாவில் நடக்கிறது. இலங்கையை வீழ்த்திய உத்வேகம் மற்றும் தன்னம்பிக்கையுடன் ஆஃப்கானிஸ்தான் அணி களமிறங்கும் நிலையில், ஷகிப் அல் ஹசனின் கேப்டன்சியில் வங்கதேச அணியும் பெரும் உத்வேகத்துடன் களமிறங்குகிறது.

இதையும் படிங்க - Asia Cup 2022: பாண்டியா பட்டைய கெளப்பிட்டாப்ள..! பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் புகழாரம்

ஷார்ஜாவில் நடக்கும் போட்டியில் ஆஃப்கானிஸ்தானுக்கு எதிராக டாஸ் வென்ற வங்கதேச அணி கேப்டன் ஷகிப் அல் ஹசன் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.

வங்கதேச அணி:

முகமது நைம், அனாமுல் ஹக், ஷகிப் அல் ஹசன் (கேப்டன்), அஃபிஃப் ஹுசைன், முஷ்ஃபிகுர் ரஹீம் (விக்கெட் கீப்பர்), மொசாடெக் ஹுசைன், மஹ்மதுல்லா மஹெடி ஹசன், முகமது சைஃபுதின், டஸ்கின் அகமது, முஸ்தாஃபிசுர் ரஹ்மான். 

இதையும் படிங்க - இந்தியா - பாகிஸ்தான் 2 அணிகளுமே படுமட்டமாகத்தான் ஆடின..! அதில் இந்தியா ஜெயித்தது - அக்தர் கடும் தாக்கு

ஆஃப்கானிஸ்தான் அணி:

ஹஸ்ரதுல்லா சேஸாய், ரஹ்மானுல்லா குர்பாஸ் (விக்கெட் கீப்பர்), இப்ராஹிம் ஜட்ரான், நஜிபுல்லா ஜட்ரான், கரிம் ஜனத், முகமது நபி (கேப்டன்), ரஷீத் கான், அஸ்மதுல்லா ஓமர்ஸாய், நவீன் உல் ஹக், முஜீபுர் ரஹ்மான், ஃபஸல்ஹக் ஃபரூக்கி.
 

Follow Us:
Download App:
  • android
  • ios