Asianet News TamilAsianet News Tamil

BAN vs IND: 2வது ஒருநாள் போட்டி டாஸ் ரிப்போர்ட்.. இந்திய அணியில் 2 அதிரடி மாற்றங்கள்

இந்தியாவிற்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
 

bangladesh win toss opt to bat against india in second odi
Author
First Published Dec 7, 2022, 11:20 AM IST

இந்தியா - வங்கதேசம் இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் வங்கதேச அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று 1-0 என தொடரில் முன்னிலை வகிக்கும் நிலையில், 2வது ஒருநாள் போட்டி இன்று நடக்கிறது.

இந்த போட்டியிலும் ஜெயித்து தொடரை வெல்லும் முனைப்பில் வங்கதேச அணியும், இந்த போட்டியில் ஜெயித்து தொடரை வெல்லும் வாய்ப்பை தக்கவைக்கும் முனைப்பில் இந்திய அணியும் களமிறங்கியுள்ளன.

2022ல் விளையாட்டு உலகில் பரபரப்பை ஏற்படுத்திய சர்ச்சை சம்பவங்கள்

இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச கேப்டன் லிட்டன் தாஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்த போட்டிக்கான இந்திய அணியில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அக்ஸர் படேல் ஃபிட்னெஸை அடைந்ததால், ஷபாஸ் நீக்கப்பட்டு அக்ஸர் அணியில் இணைந்துள்ளார். கடந்த போட்டியில் அறிமுகமான இளம் ஃபாஸ்ட் பவுலர் குல்தீப் சென்னுக்கு பதிலாக உம்ரான் மாலிக் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்திய அணி:

ரோஹித் சர்மா (கேப்டன்), ஷிகர் தவான், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல் (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், அக்ஸர் படேல், தீபக் சாஹர், ஷர்துல் தாகூர், முகமது சிராஜ், உம்ரான் மாலிக்.

சிஎஸ்கே அணியின் அடுத்த கேப்டனாக யாரை நியமிக்கலாம்..? மைக் ஹசி கருத்து

வங்கதேச அணி:

நஜ்முல் ஹுசைன் ஷாண்டோ, லிட்டன் தாஸ் (கேப்டன்), அனாமுல் ஹக், ஷகிப் அல் ஹசன், முஷ்ஃபிகுர் ரஹிம் (விக்கெட் கீப்பர்), மஹ்மதுல்லா, அஃபிஃப் ஹுசைன், மெஹிடி ஹசன் மிராஸ், நசும் அகமது, எபாடட் ஹுசைன், முஸ்தாஃபிசுர் ரஹ்மான்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios