India vs Bangladesh, Pune Match: வலியோடு விளையாட அடம் பிடிக்கும் வங்கதேச கேப்டன் – காரணம் என்ன?
வங்கதேச அணியின் கேப்டன் ஷாகிப் அல் ஹசன் காயத்துடன் இந்தியாவிற்கு எதிரான இன்றைய போட்டியில் விளையாட இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 11ஆவது லீக் ஆட்டத்தில் நியூசிலாந்துக்கு எதிராக வங்கதேச அணி விளையாடியது. சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த இந்தப் போட்டியில் வங்கதேச அணி முதலில் விளையாடி 245 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய நியூசிலாந்து 248 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
IND vs BAN: வங்கதேசத்திற்கு எதிராக உலகக் கோப்பை கிரிக்கெட்டில் 2 முறை சதம் அடித்த ரோகித் சர்மா!
இந்தப் போட்டியின் போது வங்கதேச கேப்டன் ஷாகிப் அல் ஹசனுக்கு தொடையில் காயம் ஏற்பட்டது. அப்போது அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் கண்டிப்பான முறையில் ஓய்வு எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். எனினும், அதை மீறி அவர் இந்தியாவிற்கு எதிராக இன்று நடக்கும் போட்டியில் விளையாடுவதற்காக வலைபயிற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். ஆனால், அவர் பந்து வீச்சு பயிற்சியில் ஈடுபடவில்லை.
உலகக் கோப்பையில் 5ஆவது முறையாக இந்தியா – வங்கதேசம் பலப்பரீட்சை: வெற்றி யாருக்கு?
இந்தியாவிற்கு எதிரான போட்டியில் விளையாட ஆர்வமாக இருக்கிறார். இதற்கு முக்கிய காரணம் 2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட்டில் வங்கதேச அணி 28 ரன்கள் வித்தயாசத்தில் தோல்வி அடைந்தது. அதன் பிறகு இந்தியாவிற்கு எதிராக விளையாடிய 4 போட்டிகளில் வங்கதேச அணி 3 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. அதில் ஒன்று. கடைசியாக நடந்த ஆசிய கோப்பையில் வங்கதேச அணி 6 ரன்களில் வெற்றி பெற்றது.
இன்று நடக்கும் உலகக் கோப்பை 17ஆவது லீக் போட்டியில் இந்தியாவை எப்படியும் வீழ்த்தியே ஆக வேண்டும் என்று ஷாகிப் அல் ஹசன் நினைத்துக் கொண்டு இருக்கிறார். இதன் மூலாமக உலகின் சிறந்த அணியாக கருதப்படு இந்தியாவை வீழ்த்திவிட்டோம் என்றும் பெருமையாக கூறிக் கொள்ளலாம் அல்லவா.
New Zealand vs Afghanistan: அதிக விக்கெட்டுகள் எடுத்தவர்களின் பட்டியலில் சாண்ட்னர் நம்பர் 1 இடம்!
அதே போன்று இந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் வங்கதேச அணி ஆப்கானிஸ்தான் அணியை மட்டுமே வீழ்த்தியுள்ளது. இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளிடம் தோல்வியை தழுவியுள்ளது. மேலும், இந்தியா விளையாடிய 3 போட்டிகளில் வெற்றி பெற்ற நிலையில் இன்றைய போட்டியில் இந்தியாவை வீழ்த்தினால் இந்திய அணியின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்த அணியாக வங்கதேச அணி கருதப்படும். இது போன்ற காரணங்களால் இன்றைய போட்டியில் ஷாகிப் அல் ஹசன் விளையாட வேண்டும் என்று குறிக்கோளுடன் இருக்கிறார். ஆனால், அவரை மருத்துவர்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தி வருகின்றனர்.