Asianet News TamilAsianet News Tamil

#BANvsNZ அரைசதம் அடித்து கடைசி வரை தனி நபராக போராடிய டாம் லேதம்..! வங்கதேசம் த்ரில் வெற்றி

நியூசிலாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டியில் வங்கதேச அணி 4 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
 

bangladesh beat new zealand by 4 runs in second t20
Author
Oval, First Published Sep 3, 2021, 7:32 PM IST

நியூசிலாந்து அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் வங்கதேச அணி வெற்றி பெற்று 1-0 என தொடரில் முன்னிலை வகித்த நிலையில், 2வது டி20 போட்டி இன்று நடந்தது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங் ஆடியது. வங்கதேச அணியின் தொடக்க வீரர்களான நயீம்(39) மற்றும் லிட்டன் தாஸ்(33) ஆகிய இருவரும் நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். அதன்பின்னர் பின்வரிசையில் கேப்டன் மஹ்மதுல்லா நன்றாக ஆடி 37 ரன்கள் அடிக்க, 20 ஓவரில் வங்கதேச அணி 141 ரன்கள் அடித்தது.

142 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய நியூசிலாந்து அணியில் கேப்டன் டாம் லேதமை தவிர வேறு யாருமே சரியாக ஆடவில்லை. தொடக்க வீரர்கள் டாம் பிளண்டல்(6), ரவீந்திரா(10) ஆகிய இருவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். வில் யங்(22), காலின் டி கிராண்ட் ஹோம்(8) மற்றும் ஹென்ரி நிகோல்ஸ்(6) ஆகிய மூவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் டாம் லேதம் நிலைத்து ஆடி அரைசதம் அடித்தார். 19 ஓவரில் 122 ரன்கள் அடித்திருந்த நியூசிலாந்து அணிக்கு கடைசி ஓவரில் வெற்றிக்கு 20 ரன்கள் தேவைப்பட்டது. கடைசி ஓவரில் நியூசிலாந்து அணி 15 ரன்கள் அடிக்க, 4 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது வங்கதேச அணி. டாம் லேதம் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 65 ரன்கள் அடித்திருந்தார். இதையடுத்து வங்கதேச அணி 2-0 என முன்னிலை வகிக்கிறது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios