இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேச அணி அபார வெற்றி பெற்றது.  

இங்கிலாந்து அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என இங்கிலாந்து அணி வென்ற நிலையில், அதைத்தொடர்ந்து 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர் நடக்கிறது.

முதல் டி20 போட்டி இன்று நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.

வங்கதேச அணி:

ரோனி தலுக்தர், லிட்டன் தாஸ் (விக்கெட் கீப்பர்), நஜ்முல் ஹுசைன் ஷாண்டோ, ஷகிப் அல் ஹசன் (கேப்டன்), ஷமிம் ஹுசைன், அஃபிஃப் ஹுசைன், டௌஹிட் ரிடாய், டஸ்கின் அகமது, நசும் அகமது, முஸ்தாஃபிசுர் ரஹ்மான், ஹசன் மஹ்மூத்.

13 ஆண்டுகளுக்கு பின் இந்திய மண்ணில் சதமடித்து உஸ்மான் கவாஜா சாதனை! கேமரூன் க்ரீன் பொறுப்பான பேட்டிங்

இங்கிலாந்து அணி:

ஜோஸ் பட்லர் (கேப்டன், விக்கெட் கீப்பர்), டேவிட் மலான், பென் டக்கெட், மொயின் அலி, சாம் கரன், கிறிஸ் வோக்ஸ், கிறிஸ் ஜோர்டான், அடில் ரஷீத், ஜோஃப்ரா ஆர்ச்சர், மார்க் உட்.

முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணியில் தொடக்க வீரரும் கேப்டனுமான ஜோஸ் பட்லரை தவிர வேறு யாருமே சரியாக பேட்டிங் ஆடவில்லை. தொடக்க வீரர் ஃபிலிப் சால்ட் 35 பந்தில் 38 ரன்கள் மட்டுமே அடித்தார். அதிரடியாக ஆடி அரைசதம் அடித்த ஜோஸ் பட்லர் 42 பந்தில் 4 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 67 ரன்கள் அடித்தார். டேவிட் மலான்(4), பென் டக்கெட்(20), மொயின் அலி(8), சாம் கரன்(6) ஆகியோர் சோபிக்கவில்லை. பட்லரை தவிர வேறு யாருமே சரியாக பேட்டிங் ஆடாததால் 20 ஓவரில் இங்கிலாந்து அணி, 156 ரன்கள் மட்டுமே அடித்தது.

NZ vs SL: ஒரே டெஸ்ட்டில் ஜெயசூரியா, டேனியல் வெட்டோரியின் சாதனைகள் காலி! ஆஞ்சலோ மேத்யூஸ், டிம் சௌதி புதிய சாதனை

157 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய வங்கதேச அணியில் 3ம் வரிசை வீரரான நஜ்முல் ஹுசைன் ஷாண்டோ அதிரடியாக ஆடி 30 பந்தில் 51 ரன்கள் அடித்தார். கேப்டன் ஷகிப் அல் ஹசன் பொறுப்புடன் ஆடி 24 பந்தில் 34 ரன்கள் அடிக்க, 18வது ஓவரில் இலக்கை அடித்து வங்கதேச அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று டி20 தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.