சமகால கிரிக்கெட்டின் சிறந்த வீரராக திகழ்கிறார் கோலி. சர்வதேச கிரிக்கெட்டில் சதங்களையும் சாதனைகளையும் குவித்துவருகிறார் கோலி. இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக ஜொலிக்கிறார். 

இந்திய அணிக்கு எப்படி கோலியோ, அப்படித்தான் பாகிஸ்தான் அணிக்கு பாபர் அசாம் திகழ்கிறார். பாபர் அசாமின் நேர்த்தியான பேட்டிங், அவரை சிறந்த வீரராக அடையாளம் காட்டியது. சமகால கிரிக்கெட்டின் ஜாம்பவனாக திகழும் விராட் கோலியுடன் ஒப்பிடப்படுகிறார் பாபர் அசாம். பாபர் அசாமின் நேர்த்தியான பேட்டிங் தான் அவர் கோலியுடன் ஒப்பிடப்படுவதற்கு காரணம். 

பாபர் அசாமின் கவர் டிரைவ்கள் விராட் கோலியை பார்ப்பதை போன்றே இருக்கும். அந்தளவிற்கு சிறப்பாக ஆடுவார். இந்தியா - பாகிஸ்தான் இடையேயான முக்கியமான போட்டி நாளை நடக்கவுள்ளது. இந்த போட்டியில் விராட் கோலி மற்றும் பாபர் அசாம் ஆகிய இருவரின் மீதும் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. 

24 வயது இளம் வீரரான பாபர் அசாம், இந்தியாவுக்கு எதிரான போட்டிக்காக தீவிர பயிற்சி மேற்கொண்டுவருகிறார். பாபர் அசாம் தனது முன்னோடியாக நினைக்கும் விராட் கோலி பேட்டிங் ஆடும் வீடியோக்களை பார்த்து, பல்வேறு சூழல்களில் விராட் கோலி எப்படி பேட்டிங் ஆடுகிறார் என்பதிலிருந்து கற்றுக்கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார். கோலியின் வெற்றி விகிதம் மிக அதிகம். அதே சம்பவத்தை பாகிஸ்தான் அணிக்காக தான் செய்ய விரும்புவதாகவும் பாபர் அசாம் தெரிவித்துள்ளார்.