Asianet News TamilAsianet News Tamil

ஒருநாள் கிரிக்கெட்டில் ஹாஷிம் ஆம்லாவின் சாதனையை முறியடித்தார் பாபர் அசாம்

நெதர்லாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 74 ரன்கள் அடித்ததன் மூலம், ஹாஷிம் ஆம்லாவின் சாதனையை முறியடித்தார் பாபர் அசாம்.
 

babar azam breaks hashim amla odi record
Author
Netherlands, First Published Aug 16, 2022, 10:42 PM IST

சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரர்களில் ஒருவராக வளர்ந்துள்ள பாபர் அசாம்,  சர்வதேச கிரிக்கெட்டில் பழைய பேட்டிங் சாதனைகளை முறியடித்து புதிய மைல்கற்களை எட்டிவருகிறார்.

விராட் கோலி பேட்டிங் சாதனைகளை தகர்த்துவந்த நிலையில், சுமார் கடந்த 3 ஆண்டுகளாக கோலி ஃபார்மில் இல்லாமல் தவித்துவரும் நிலையில், இப்போது பாபர் அசாம் கோலியின் சாதனைகளையும் சேர்த்து தகர்த்துவருகிறார்.

இதையும் படிங்க - ZIM vs IND: முதல் ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவன்..! ஷுப்மன் கில்லுக்கு புதிய ரோல்

நெதர்லாந்துக்கு எதிரான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணி 50 ஓவரில் 314 ரன்களை குவித்தது. பாகிஸ்தான் அணியில் அபாரமாக பேட்டிங் ஆடிய ஃபகர் ஜமான் சதமடித்தார்.

ஃபகர் ஜமான் 109 ரன்களை குவித்த நிலையில், கேப்டன் பாபர் அசாம் பொறுப்புடன் பேட்டிங் ஆடி 74 ரன்களை குவித்தார். இது ஒருநாள் கிரிக்கெட்டில் பாபர் அசாமின் 88வது இன்னிங்ஸ். இந்த 74 ரன்களுடன் சேர்த்து 88 ஒருநாள் இன்னிங்ஸின் முடிவில் 4481 ரன்களை குவித்துள்ளார் பாபர் அசாம்.

இதையும் படிங்க - சூர்யகுமாருக்கு ஏற்ற பேட்டிங் ஆர்டர் இதுதான்..! லெஜண்ட் ரிக்கி பாண்டிங் கருத்து

இதன்மூலம் ஒருநாள் கிரிக்கெடில் 88 இன்னிங்ஸின் முடிவில் அதிக ரன்களை குவித்த வீரர் என்ற ஹாஷிம் ஆம்லாவின் (4473) சாதனையை முறியடித்துள்ளார் பாபர் அசாம்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios