Asianet News TamilAsianet News Tamil

உலக கோப்பை அணி தேர்வு.. கரெக்ட்டா லாஜிக்கை பிடித்து தேர்வுக்குழுவை தெறிக்கவிட்ட முன்னாள் கேப்டன்

உலக கோப்பை மே மாதம் 30ம் தேதி தொடங்க உள்ள நிலையில், உலக கோப்பைக்கான 15 வீரர்களை கொண்ட இந்திய அணி கடந்த திங்கட்கிழமை அறிவிக்கப்பட்டது. 
 

azharuddin questioned drop of rishabh pant in wolrd cup squad
Author
India, First Published Apr 18, 2019, 11:57 AM IST

உலக கோப்பை மே மாதம் 30ம் தேதி தொடங்க உள்ள நிலையில், உலக கோப்பைக்கான 15 வீரர்களை கொண்ட இந்திய அணி கடந்த திங்கட்கிழமை அறிவிக்கப்பட்டது. 

நீண்ட இழுபறியில் இருந்த 4ம் வரிசை வீரருக்கான இடத்திற்கு விஜய் சங்கரையும் மாற்று விக்கெட் கீப்பராக தினேஷ் கார்த்திக்கையும் தேர்வு செய்திருந்தது தேர்வுக்குழு. ராயுடுவிற்கு பதிலாக விஜய் சங்கர் எடுக்கப்பட்டதுகூட எதிர்பார்க்கப்பட்டது தான். ஆனால் ரிஷப் பண்ட் புறக்கணிக்கப்பட்டு தினேஷ் கார்த்திக் எடுக்கப்பட்டது அதிர்ச்சிகரமான தேர்வுதான். 

ஏனெனில் ஒருநாள் அணியில் தினேஷ் கார்த்திக்கைவிட ரிஷப் பண்ட்டுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பாக ஆடி, அதன்மூலம் ஒருநாள் அணியிலும் இடம்பிடித்த ரிஷப் பண்ட், உலக கோப்பை அணியில் தனது இடத்தை உறுதி செய்துவிட்டதாகவே பலரும் பார்த்தனர். வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய அணிகளுக்கு எதிரான தொடரிலும் ரிஷப் பண்ட் தான் அணியில் இடம்பிடித்திருந்தார். 

azharuddin questioned drop of rishabh pant in wolrd cup squad

தினேஷ் கார்த்திக் டி20 போட்டிகளுக்கு மட்டுமே எடுக்கப்பட்டதால் அவரை டி20 வீரராக மட்டுமே தேர்வுக்குழுவும் அணி நிர்வாகமும் பார்ப்பதாக ஒரு தோற்றம் இருந்தது. அதனால் ரிஷப் பண்ட்டுக்கான வாய்ப்பே இருப்பதாக தெரிந்தது. ஆனால் கடைசி நேரத்தில் ரிஷப் பண்ட்டை ஓரங்கட்டிவிட்டு தினேஷ் கார்த்திக்கை அணியில் எடுத்துள்ளனர். ரிஷப் பண்ட்டை விட தினேஷ் கார்த்திக் அனுபவம் வாய்ந்த மற்றும் சிறந்த விக்கெட் கீப்பர் என்பதால் அவரை அணியில் எடுத்ததாக தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் விளக்கமளித்திருந்தார். 

இந்நிலையில், ரிஷப் பண்ட்டை ஒதுக்கியதால் அதிருப்தியடைந்த முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன், லாஜிக்காக ஒரு கேள்வி கேட்டுள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அசாருதீன், இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் சிறப்பாக ஆடியதோடு, தொடர்ந்து நன்றாக ஆடிக்கொண்டிருக்கும் ஒரு இளம் வீரரை ஓரங்கட்டுவது நல்லதா..? அவர் நல்ல விக்கெட் கீப்பர் இல்லையென்றால், அவரை ஏன் டெஸ்ட் அணியில் எடுத்தீர்கள் என்று அசாருதீன் கேள்வி எழுப்பியுள்ளார். 

azharuddin questioned drop of rishabh pant in wolrd cup squad

அசாருதீன் எழுப்பியுள்ள கேள்வி அருமையானது. டெஸ்ட் கிரிக்கெட்டில், ஒரு அணியின் சிறந்த விக்கெட் கீப்பருக்குத்தான் வாய்ப்பு கிடைக்கும். இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய தொடர்களில் ரிஷப் பண்ட் எப்படி விக்கெட் கீப்பிங் செய்தார் என்பது ஒருபுறமிருக்க, அவரை சிறந்த வீரராக கருதியதால்தானே அவருக்கு டெஸ்ட் அணியில் வாய்ப்பு கொடுக்கப்பட்டது. டெஸ்ட் அணியில் ஆடுமளவிற்கு தகுதி வாய்ந்த வீரரை ஒருநாள் அணியில் ஓரங்கட்டியது எப்படி என்பதுதான் அசாருதீனின் கேள்வி. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios