Asianet News TamilAsianet News Tamil

#T20WorldCup பாகிஸ்தானை இந்தியா வீழ்த்திரும்.. எதார்த்தத்தை ரொம்ப ஓபனா பேசிய பாக்., முன்னாள் வீரர்

டி20 உலக கோப்பையில் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர் அசார் மஹ்மூத் தெரிவித்துள்ளார்.
 

azhar mahmood feels india have an advantage in the match against pakistan in t20 world cup
Author
Pakistan, First Published Oct 16, 2021, 5:43 PM IST

இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி என்றாலே அனல் பறக்கும். இரு அணி வீரர்களும் வெற்றி வேட்கையுடன் மிகத்தீவிரமாக விளையாடுவார்கள். கிரிக்கெட்டில் எதிரி அணிகளான இந்தியாவும் பாகிஸ்தானும், கடந்த சில ஆண்டுகளாக ஐசிசி தொடர்களில் மட்டுமே மோதிக்கொள்கின்றன. 

இரு அணிகளும் இருதரப்பு அல்லது முத்தரப்பு தொடர்களில் எல்லாம் ஆடுவதில்லை. எனவே இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டியை ஐசிசி தொடர்களில் மட்டுமே பார்க்கமுடியும்.

உலக கோப்பையில் இதுவரை இந்தியாவை பாகிஸ்தான் அணி வீழ்த்தியதேயில்லை. ஒருநாள் உலக கோப்பை மற்றும் டி20 உலக கோப்பை என எந்தவிதமான உலக கோப்பை தொடரிலும் இந்தியாவை ஒரு போட்டியில் கூட வீழ்த்தியதில்லை என்ற மோசமான ரெக்கார்டை வைத்திருக்கும் பாகிஸ்தான் அணிக்கு, அதனாலேயே உலக கோப்பை தொடரில் இந்தியாவை எதிர்கொள்ளும்போது பாகிஸ்தான் அணி மீதான அழுத்தமும் நெருக்கடியும் அதிகமாக இருக்கும். அந்த அழுத்தத்தினாலேயே அந்த அணிக்கு இந்தியாவை எதிர்கொள்வதென்றால், ஒருவித பயமும் பதற்றமும் தொற்றிக்கொள்ளும். அதனால் இந்தியாவிடம் தோல்வியும் அடைந்துவிடும்.

இதையும் படிங்க - தோனி மாதிரியான ஆளு அவரு.. ஆர்சிபி கேப்டன்சிக்கு தகுதியான வீரர்! இங்கி., வீரரை பரிந்துரைக்கும் மைக்கேல் வான்

டி20 உலக கோப்பையில் இந்தியாவும் பாகிஸ்தானும் சூப்பர் 12 பிரிவில் ஒரே பிரிவில் இடம்பெற்றுள்ள நிலையில், வரும் 24ம் தேதி நடக்கும் போட்டியில் இரு அணிகளும் மோதுகின்றன. உலக கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான வின்னிங் ரெக்கார்டை தக்கவைத்துக்கொள்ளும் முனைப்பில் இந்திய அணியும், அந்த ரெக்கார்டை தகர்க்கும் முனைப்பில் பாகிஸ்தான் அணியும் மோதவுள்ளன.

இந்நிலையில், இந்த போட்டி குறித்து பேசியுள்ள பாகிஸ்தான் முன்னாள் வீரரும், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் தலைவருமான அசார் மஹ்மூத், இந்தியா - பாகிஸ்தான் போட்டி என்றாலே எப்போதுமே ஸ்பெஷல் தான். அதிகமான எதிர்பார்ப்பும், வீரர்கள் மீது அதிகமான அழுத்தமும் இருக்கும். அந்த குறிப்பிட்ட நாளில் எந்த அணி அழுத்தத்தை சிறப்பாக கையாள்கிறதோ அந்த அணி தான் வெல்லும். அந்தவகையில், இந்த போட்டியிலும் அப்படித்தான். ஆனால் எதார்த்தம் என்னவென்றால், இந்திய அணிக்கு சாதகம் சற்று அதிகம். ஏனெனில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் அண்மையில் ஐபிஎல்லில் ஆடியிருக்கிறார்கள். அதுவும் டி20 உலக கோப்பை நடக்கவுள்ள, அதே ஐக்கிய அரபு அமீரகத்தில் தான். அமீரக கண்டிஷனுக்கு பாகிஸ்தானை போலவே இந்தியாவும் பழக்கப்பட்ட அணி தான். எனவே பாகிஸ்தானைவிட இந்தியாவிற்கு சற்று அதிக சாதகம் இருப்பதாக அசார் மஹ்மூத் தெரிவித்துள்ளார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios