சுத்து போட்ட பென் ஸ்டோக்ஸ்; தனி ஒருவனாக போராடிய உஸ்மான் கவாஜா: ஆஸி, 386க்கு ஆல் அவுட்!
இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 386 ரன்கள் எடுத்துள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காமில் நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் ஆடியது. அதன்படி முதலில் ஆடிய இங்கிலாந்து 8 விக்கெட் இழப்பிற்கு 393 ரன்கள் எடுத்திருந்த நிலையில், கேப்டன் பென் ஸ்டோக்ஸ் டிக்ளேர் செய்வதாக அறிவித்தார்.
ருதுராஜ் கெய்க்வாட் காலில் விழுந்து வணங்கிய ரசிகர்!
இதில் ஜோ ரூட் 118 (நாட் அவுட்), ஜானி பேர்ஸ்டோவ் 78 ரன்களும், ஜாக் கிராவ்லி 61 ரன்களும் எடுத்தனர். இதையடுத்து இதையடுத்து ஆஸ்திரேலியா பேட்டிங் ஆடியது. இதில் டிராவிஸ் ஹெட் 50 ரன்களும், அலெக்ஸ் கேரி 66 ரன்களும், கேமரூன் க்ரீன் 38 ரன்களும் எடுத்தனர். ஆஷஸ் தொடரில் தனது முதல் சதத்தை பூர்த்தி செய்த உஸ்மான் கவாஜாவை ஆட்டமிழக்க இங்கிலாந்து வீரர்கள் போராடினர்.
யூடியூப் சேனலுக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி அளித்த யுஸ்வேந்திர சாஹல்!
ஒரு கட்டத்தில் எல்லா பீல்டர்களும் 30 யார்ட்ஸ் சர்க்கிளுக்குள்ளாக நிற்க வைத்து கிளீன் போல்டாக்கினார். கடைசியாக அவர் 141 ரன்களில் ஆட்டமிழந்தார். கடைசி வரை ஆஸ்திரேலியா அணி அதிக ரன்கள் குவிக்க தனி ஒருவனாக போராடினார். இந்தப் போட்டியில் அலெக்ஸ் கேரியின் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலமாக முதல் தர கிரிக்கெட் போட்டியில் ஆண்டர்சன் தனது 1100ஆவது விக்கெட்டை வீழ்த்தினார்.
டிஎன்பிஎல் தொடரில் 1500 ரன்களை கடந்து கௌசிக் காந்தி சாதனை!
இறுதியாக ஆஸ்திரேலியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 386 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலமாக இங்கிலாந்து 7 ரன்கள் முன்னிலையுடன் தனது 2ஆவது இன்னிங்ஸை ஆடியது. எனினும் போட்டியின் போது நீண்ட நேரமாக மழை பெய்தது. மூன்றாம் நாள் முடிவில் இங்கிலாந்து 2 விக்கெட் இழப்பிற்கு 28 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.