Asianet News TamilAsianet News Tamil

சொந்த மண்ணில் ஒயிட் வாஷ் ஆன மகளிர் அணி, பாதிக்கு பாதி கூட எடுக்காமல் 148 ரன்னுக்கு சுருண்ட பரிதாபம்!

ஆஸ்திரேலியா மகளிர் அணிக்கு எதிரான 3ஆவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய மகளிர் அணி 148 ரன்களுக்கு சுருண்டு 190 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளது.

Australia Women Beat India Women by 190 Runs Difference in 3rd and Final ODI Match at Mumbai rsk
Author
First Published Jan 2, 2024, 9:24 PM IST | Last Updated Jan 2, 2024, 9:24 PM IST

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆஸ்திரேலியா ஒரு டெஸ்ட் போட்டி மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஏற்கனவே நடந்து முடிந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இதையடுத்து நடந்த முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில், 2ஆவது ஒருநாள் போட்டியில் கடைசி வரை போராடிய இந்திய மகளிர் அணியானது 3 ரன்களில் வெற்றியை கோட்டைவிட்டது. இதன் மூலமாக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை ஆஸ்திரேலிய மகளிர் அணி 2-0 என்று கைப்பற்றியது.

லிட்ச்பீல்டு, ஹீலி தரமான சம்பவம் – ஆஸ்திரேலியா 338 ரன்கள் குவிப்பு!

இதையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான 3ஆவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று மும்பையில் நடந்தது. இதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலியா மகளிர் அணி கேப்டன் அலீஸா ஹீலி பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி முதலில் ஃபோப் லிட்ச்பீல்டு மற்றும் அலீசா ஹீலி இருவரும் களமிறங்கி அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தனர். இவர்களது அதிரடி பேட்டிங் ஆஸ்திரேலியா 338 ரன்கள் குவிக்க உதவியது.

Australia Women Beat India Women by 190 Runs Difference in 3rd and Final ODI Match at Mumbai rsk

2021, 2023 ஆம் ஆண்டுகளில் முதல் டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த ரோகித் சர்மா: 2024ல் எப்படி?

அலீசா ஹீலி 82 ரன்களும், ஃபோப் லிட்ச்பீல்டு 119 ரன்களும் எடுத்தனர். பின்னர் 339 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு இந்திய மகளிர் அணி பேட்டிங் செய்தது. இதில், தொடக்க வீராங்கனை யாஷ்டிகா பாட்டீயா 6 ரன்களில் ஆட்டமிழந்தார். ஸ்மிருதி மந்தனா அதிகபட்சமாக 29 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். ரிச்சா கோஷ் 19 ரன்களில் வெளியேறினார்.

மலைகளுக்கு நடுவில் மைதானம்; மழைக்கு வாய்ப்பில்லை, 5 நாட்களும் போட்டி சக்ஸஸ்புல்லா நடக்கும்!

கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 3 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்தவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். ஜெமிமா ரோட்ரிக்ஸ் 25 ரன்னிலும், பூஜா வஸ்த்ரேகர் 14 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். ஆல்ரவுண்டர் தீப்தி சர்மா 25 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். பவுலிங்கைப் பொறுத்த வரையில் ஆஸ்திரேலியா மகளிர் அணியில் ஜார்ஜியா வேர்ஹாம் 3 விக்கெட்டும், மேகன் ஷட், அலானா கிங் மற்றும் அன்னபெல் சதர்லேண்ட் ஆகியோர் தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.

Mumbai Indians Captain: மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாகும் ஜஸ்ப்ரித் பும்ரா?

Australia Women Beat India Women by 190 Runs Difference in 3rd and Final ODI Match at Mumbai rsk

2ஆவது ஒருநாள் போட்டியில் தோல்வி அடைந்து ஆண்டை நிறைவு செய்த இந்திய மகளிர் அணி, 3ஆவது போட்டியிலும் தோல்வி அடைந்து புத்தாண்டை தொடங்கியுள்ளது. ஒருநாள் போட்டியைத் தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடக்க இருக்கிறது. வரும், 5ஆம் தேதி இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அது என்னுடைய ஆசை – யாராவது எடுத்திருந்தால் கொடுத்திடுங்க, உங்களுக்கு வேற பேக் தருகிறேன் – கெஞ்சும் வார்னர்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios