இந்திய அணி 3 ஒருநாள், 3 டி20 மற்றும் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுவதற்காக ஆஸ்திரேலியாவிற்கு சென்றுள்ளது. முதலில் ஒருநாள் தொடரும், அடுத்து டி20 தொடரும் கடைசியாக டெஸ்ட் தொடரும் நடக்கவுள்ளது. 

முதல் ஒருநாள் போட்டி இன்று சிட்னியில் நடக்கிறது. இந்திய நேரப்படி காலை 9.10 மணிக்கு போட்டி தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் ஃபின்ச் பேட்டிங்கை தேர்வு செய்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு ஸ்டேடியத்தில் பார்வையாளர்கள் மத்தியில் வீரர்கள் ஆடவுள்ளனர். ஐம்பது சதவிகித பார்வையாளர்கள் போட்டியை காண அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இரு அணிகளுமே சமபலத்துடன் களமிறங்கியுள்ளன. இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ஷிகர் தவானும் மயன்க் அகர்வாலும் இறங்குகின்றனர். கேஎல் ராகுல் மிடில் ஆர்டரில் ஆடவுள்ளார். ஆல்ரவுண்டர்கள் ஹர்திக் பாண்டியா மற்றும் ஜடேஜா ஆகியோரும் ஃபாஸ்ட் பவுலர்களாக பும்ரா, ஷமியுடன் எதிர்பார்த்தபடியே சைனி ஆடுகிறார்.

இந்திய அணி:

ஷிகர் தவான், மயன்க் அகர்வால், விராட் கோலி(கேப்டன்), ஷ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல்(விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, யுஸ்வேந்திர சாஹல், முகமது ஷமி, நவ்தீப் சைனி, ஜஸ்ப்ரித் பும்ரா.
 
வலுவான இந்திய அணிக்கு சற்றும் சளைக்காத அளவிற்கு பேட்டிங் மற்றும் பவுலிங்கில் சிறந்த அணியாக ஆஸ்திரேலிய அணி உள்ளது. இரு அணிகளும் சமபலத்துடன் மோதுவதால் போட்டி கடுமையாக இருக்கும்.

ஆஸ்திரேலிய அணி:

ஆரோன் ஃபின்ச்(கேப்டன்), டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித், மார்னஸ் லபுஷேன், க்ளென் மேக்ஸ்வெல், அலெக்ஸ் கேரி(விக்கெட் கீப்பர்), மார்கஸ் ஸ்டோய்னிஸ், பாட் கம்மின்ஸ்,  மிட்செல் ஸ்டார்க், ஹேசில்வுட், ஆடம் ஸாம்பா.