இந்தியாவுக்கு எதிரான 2வது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணியில் களமிறங்கும் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.

இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில், 2வது போட்டி நாளை சிட்னியில் நடக்கிறது. ஆஸ்திரேலிய அணி தொடரை வெல்லும் வாய்ப்பை தக்கவைக்க கண்டிப்பாக வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் இந்த போட்டியில் ஆடுகிறது.

இந்திய நேரப்படி நாளை பிற்பகல் 1.40 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியில், கடந்த போட்டியில் களமிறங்கிய அதே ஆடும் லெவன் காம்பினேஷனுடன் தான் ஆஸ்திரேலிய அணி களமிறங்கும். ஆஸ்திரேலிய அணியில் எந்த மாற்றமும் செய்யப்பட வாய்ப்பில்லை.

உத்தேச ஆஸ்திரேலிய அணி:

ஷார்ட், ஃபின்ச்(கேப்டன்), மேத்யூ வேட்(விக்கெட் கீப்பர்), ஸ்மித், ஹென்ரிக்ஸ், மேக்ஸ்வெல், ஸ்வெப்சன், ஹேசில்வுட், மிட்செல் ஸ்டார்க், ஸாம்பா, சீன் அபாட்.