இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான முதல் 2 ஒருநாள் போட்டிகளிலும் வெற்றி பெற்று 2-0 என ஆஸ்திரேலிய அணி வென்றுவிட்ட நிலையில், கடைசி ஒருநாள் போட்டி கான்பெராவில் டிசம்பர் 2ம் தேதி(நாளை மறுநாள்) நடக்கவுள்ளது.

ஒருநாள் தொடரின் வெற்றி முடிவாகிவிட்டதால், கடைசி போட்டி இரு அணிகளுக்குமே முக்கியமான போட்டியல்ல. ஆனால் இந்திய அணி ஆறுதல் வெற்றியாவது பெற முயலும்.  ஆஸ்திரேலிய அணிக்கு இந்த போட்டி பெரியளவில் முக்கியமில்லை என்றாலும், இந்திய அணியை ஒயிட்வாஷ் செய்ய முயலும்.

ஆஸ்திரேலிய அணியில் முதல் 2 போட்டிகளில் ஆடாத ஒருசில வீரர்களுக்கு கடைசி போட்டியில் வாய்ப்பளிக்கப்படும். 2வது போட்டியில் காயமடைந்த வார்னர் கடைசி போட்டியில் ஆடமாட்டார் என்பதால் ஆரோன் ஃபின்ச்சுடன் மார்னஸ் லபுஷேன் கூட தொடக்க வீரராக இறங்க வாய்ப்புள்ளது.

மிட்செல் ஸ்டார்க், பாட் கம்மின்ஸ் ஆகிய டெஸ்ட் ஃபாஸ்ட் பவுலர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டு, டேனியல் சாம்ஸ், ஆண்ட்ரூ டை ஆகியோர் சேர்க்கப்பட வாய்ப்புள்ளது. மார்கஸ் ஸ்டோய்னிஸ் அணியில் சேர்க்கப்படுவார்.

உத்தேச ஆஸ்திரேலிய அணி:

ஃபின்ச்(கேப்டன்), லபுஷேன், ஸ்மித், மார்கஸ் ஸ்டோய்னிஸ், க்ளென் மேக்ஸ்வெல், அலெக்ஸ் கேரி(விக்கெட் கீப்பர்), மோய்ஸஸ் ஹென்ரிக்ஸ், அஷ்டன் அகர்/ஆடம் ஸாம்பா, ஆண்ட்ரூ டை, டேனியல் சாம்ஸ், ஹேசில்வுட்.