Asianet News TamilAsianet News Tamil

இந்திய மண்ணில் தான் எனது கடைசி போட்டி..! அதுக்குள்ள ஓய்வை அறிவித்த ஆரோன் ஃபின்ச்

ஆஸ்திரேலிய வெள்ளைப்பந்து கிரிக்கெட் அணிகளின் கேப்டனான ஆரோன் ஃபின்ச், தனது ஓய்வு எப்போது என்று தெரிவித்துள்ளார்.
 

australia skipper aaron finch reveals his retirement plan
Author
Australia, First Published Aug 19, 2020, 4:34 PM IST

ஆஸ்திரேலிய ஒருநாள் மற்றும் டி20 அணிகளின் கேப்டனும் அதிரடி தொடக்க வீரருமான ஆரோன் ஃபின்ச், இந்திய மண்ணில் தான் தனது ஓய்வு என்று தெரிவித்துள்ளார்.

2011ம் ஆண்டு ஆஸ்திரேலிய டி20 அணியில் அறிமுகமான ஃபின்ச், 2013ம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்காக தனது முதல் ஒருநாள் போட்டியை ஆடினார். 2018ம் ஆண்டு டெஸ்ட் அணியில் இடம்பிடித்த ஃபின்ச், வெறும் 5 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே ஆடியுள்ளார்.

australia skipper aaron finch reveals his retirement plan

வெள்ளைப்பந்து கிரிக்கெட்டின் அதிரடி தொடக்க வீரரான ஆரோன் ஃபின்ச், கடந்த 2018ம் ஆண்டு பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில், ஸ்டீவ் ஸ்மித் கேப்டன் பதவியை இழந்ததையடுத்து, ஆஸ்திரேலிய ஒருநாள் மற்றும் டி20 அணிகளின் கேப்டனாக ஃபின்ச் நியமிக்கப்பட்டார். ஃபின்ச்சின் தலைமையில் தான், ஆஸ்திரேலிய அணி கடந்த ஆண்டு இங்கிலாந்தில் நடந்த உலக கோப்பையில் களமிறங்கி, அரையிறுதி வரை சென்றது.

australia skipper aaron finch reveals his retirement plan

ஆஸ்திரேலிய அணிக்காக 126 ஒருநாள் போட்டிகளில் ஆடி 4882 ரன்களை குவித்துள்ள ஃபின்ச், 61 டி20 போட்டிகளில் ஆடி 1989 ரன்களை விளாசியுள்ளார். 33 வயதான ஆரோன் ஃபின்ச், 2023ல் இந்தியாவில் நடக்கும் உலக கோப்பையுடன் ஓய்வுபெற திட்டமிட்டிருப்பதாக தெரிவித்துள்ளார். 

கொரோனா அச்சுறுத்தலுக்கு பின், ஆரோன் ஃபின்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி, இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் கொண்ட தொடரில் ஆடவுள்ளது. அதற்காக தயாராகிவரும் நிலையில், ஃபின்ச் அளித்த பேட்டியொன்றில், தனது ஓய்வு குறித்து பேசியுள்ளார். 

australia skipper aaron finch reveals his retirement plan

தனது ஓய்வு குறித்து பேசிய ஃபின்ச், 2023ல் இந்தியாவில் நடக்கும் ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பையுடன் ஓய்வுபெற வேண்டும் என்பதுதான் என்னுடைய இப்போதைய திட்டம். என்னுடைய மனநிலை இதுதான். ஆனால் இதற்கிடையே, என்னுடைய ஃபிட்னெஸ், ஃபார்ம் ஆகிய அனைத்தும் முக்கியம். 2023 உலக கோப்பையை ஆடும்போது எனக்கு 36 வயது. எனவே ஃபிட்னெஸ் உள்ளிட்ட பல காரணிகள் அனுமதிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு நடக்கவேண்டிய டி20 உலக கோப்பை ஒத்திவைக்கப்பட்டுள்ளதால், 2021 மற்றும் 2022 ஆகிய இரண்டு ஆண்டுகளும் டி20 உலக கோப்பை அடுத்தடுத்து நடக்கவுள்ளன. அதைத்தொடர்ந்து 2023ல் ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பை இந்தியாவில் நடக்கவுள்ளது. இந்த 3 உலக கோப்பைகளையும் ஆடிவிட்டு, இந்திய மண்ணில் 2023ல் ஓய்வு பெறலாம் என ஃபின்ச் திட்டமிட்டுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios