மகளிர் டி20 உலக கோப்பை ஆஸ்திரேலியாவில் நடந்துவருகிறது. இதில் லீக் சுற்றின் முதல் 3 போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்திய அணி ஏற்கனவே அரையிறுதிக்கு முன்னேறிவிட்டது. 

ஆஸ்திரேலியா மற்றும் வங்கதேசம் ஆகிய அணிகளுக்கு இடையேயான போட்டி கான்பெர்ராவில் நடந்துவருகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி, முதலில் பேட்டிங் ஆடியது. 

ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீராங்கனைகள் அலைசா ஹீலி மற்றும் பெத் மூனி ஆகிய இருவரும் தொடக்கம் முதலே வங்கதேசத்தின் பவுலிங்கை அடித்து நொறுக்கினர். இருவருமே விக்கெட்டை விட்டுக்கொடுக்காமல் அதேநேரத்தில் வங்கதேச பவுலிங்கை அடித்தும் ஆடினர். அபாரமாக ஆடிய இருவருமே அரைசதம் அடித்தனர். 

முதல் விக்கெட்டையே வீழ்த்த முடியாமல் வங்கதேச அணி திணறியது. மிகச்சிறப்பாக ஆடிய ஹீலி, சதத்தை நோக்கி ஆடிக்கொண்டிருந்தார். ஆனால் 83 ரன்களில் ஆட்டமிழந்து சதத்தை தவறவிட்டார். முதல் விக்கெட்டுக்கு ஹீலியும் மூனியும் இணைந்து 17 ஓவரில் 151 ரன்களை குவித்தனர்.

ஹீலி 83 ரன்களில் ஆட்டமிழந்ததையடுத்து, மூனியுடன் கார்ட்னெர் ஜோடி சேர்ந்தார். இவர்களும் டெத் ஓவர்களில் அடித்து ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். டெத் ஓவர்களில் இருவரும் அடித்து ஆடினர். குறிப்பாக கடைசி ஓவரில் இருவருமே தலா ஒரு பவுண்டரி உட்பட 7 ரன்கள் அடிக்க, கடைசி ஓவரில் 14 ரன்களை குவித்து, 20 ஓவரில் 189 ரன்களை குவித்தது  ஆஸ்திரேலிய அணி. 

Also Read - அதிரடி பேட்ஸ்மேன் தேர்வு செய்த ஆல்டைம் டி20 பெஸ்ட் லெவன்.. சில முக்கிய தலைகள் புறக்கணிப்பு

ஹீலி 53 பந்தில் 83 ரன்களை குவித்து ஆட்டமிழந்த நிலையில், மூனி 58 பந்தில் 81 ரன்களை குவித்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.