Asianet News TamilAsianet News Tamil

பாகிஸ்தான் அணிக்கு செம குட்நியூஸ்! 24 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தானுக்கு சென்று கிரிக்கெட் ஆடுகிறது ஆஸ்திரேலியா

24 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தானுக்கு கிரிக்கெட் ஆடுவதற்காக சுற்றுப்பயணம் செல்கிறது ஆஸ்திரேலிய அணி.
 

australia is set to tour pakistan after 24 years
Author
Chennai, First Published Nov 8, 2021, 8:30 PM IST

பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் சென்று கிரிக்கெட் ஆடுவதை அனைத்து அணிகளுமே தவிர்த்துவிட்டன. இந்தியாவும் பாகிஸ்தானும் இருதரப்பு தொடரில் ஆடுவதேயில்லை. ஐசிசி தொடர்களில் மட்டுமே இந்தியாவும் பாகிஸ்தானும் ஆடுகின்றன.

பாகிஸ்தான் அணி எந்த அணிக்கு எதிராகவும் ஹோம் தொடரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்திவந்தது. அண்மைக்காலமாக பாகிஸ்தானுக்கு அணிகள் செல்ல தொடங்கிய நேரத்தில், பாதுகாப்பு அச்சுறுத்தலை காரணம் காட்டி பாகிஸ்தானுக்கு சென்ற நியூசிலாந்து அணி, கிரிக்கெட் தொடரை ரத்து செய்துவிட்டு நாடு திரும்பியது.

இதையும் படிங்க - நாட்டுக்காக ஆடுறத விட ஐபிஎல் தான் இவங்களுக்கு முக்கியமா போச்சு! பிசிசிஐ உடனே நடவடிக்கை எடுக்கணும் - கபில் தேவ்

நியூசிலாந்தை தொடர்ந்து, அந்த அணி கூறிய அதே பாதுகாப்பு அச்சுறுத்தல் என்ற காரணத்தை காட்டி இங்கிலாந்து அணியும் பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தை ரத்து செய்தது. பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு இது பலத்த அடியாகவும், அவமானமாகவும் அமைந்தது.

பாகிஸ்தானுக்கு கிரிக்கெட் ஆட ஒரு அணியும் வருவதில்லை என்பது அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்துக்கும் கிரிக்கெட் அணிக்கும், ரசிகர்களுக்கும் பெரும் மனவருத்தத்தை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க - நீங்க சொல்றது ஒண்ணும் செய்றது ஒண்ணுமா-வுல இருக்கு..! இந்திய அணி தேர்வை கடுமையாக விளாசிய ஹர்பஜன் சிங்

எனவே, தங்கள் நாட்டில் வந்து ஆட மறுக்கும் அணிகள், நீ நான் என்று போட்டி போட்டுக்கொண்டு பாகிஸ்தானுக்கு வந்து ஆட விரும்ப வேண்டும் என்ற வேட்கையை மனதில்வைத்துக்கொண்டு டி20 உலக கோப்பையில் அபாரமாக ஆடியது பாகிஸ்தான் அணி. இந்தியா, நியூசிலாந்து ஆகிய பெரிய அணிகளுக்கு எதிராக அபார வெற்றி பெற்று, சூப்பர் 12 சுற்றில் ஆடிய அனைத்து அணிகளுக்கு எதிராகவும் வென்று 10 புள்ளிகளுடன் அரையிறுதிக்கு முன்னேறியது.

இதையும் படிங்க - சீனியர் பிளேயர்ஸ்லாம் கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க!2022 டி20 உலக கோப்பைக்கு இந்த 5 இளம் வீரர்களை ரெடி பண்ணுங்க - சேவாக்

இந்நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு ஒரு பெரும் மகிழ்ச்சியான செய்தி கிடைத்துள்ளது. கடைசியாக 1998-99ல் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்து ஆடிய ஆஸ்திரேலிய அணி, 24 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக மீண்டும் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செல்கிறது. இந்த டி20 உலக கோப்பை அரையிறுதிலும் பாகிஸ்தானும் ஆஸ்திரேலியாவுமே மோதுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க - முடிந்தது கோலியின் சோலி.. டி20 கிரிக்கெட்டில் கோலியின் டாப் 5 கேப்டன்சி சொதப்பல்கள்

அடுத்த ஆண்டு (2022) மார்ச் மாதம் பாகிஸ்தானுக்கு செல்லும் ஆஸ்திரேலிய அணி, 3 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் ஒரு டி20 போட்டி கொண்ட தொடரில் ஆடுகிறது. மார்ச் 3ம் தேதி தொடங்கும் முதல் டெஸ்ட் போட்டி கராச்சியிலும், 2வது டெஸ்ட் ராவல்பிண்டியிலும், 3வது டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள், ஒரு டி20 ஆகிய போட்டிகள் லாகூரிலும் நடக்கின்றன.
 

Follow Us:
Download App:
  • android
  • ios