ஆஸ்திரேலியா வீரர் டிராவிஸ் ஹெட்டிற்கு கோவிட் 19 பாசிட்டிவ்; 2ஆவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்பது சந்தேகம்!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக ஆஸ்திரேலியா வீரர் டிராவிஸ் ஹெட்டிற்கு கோவிட் 19 பாசிட்டிவ் உறுதி செய்யப்பட்டுள்ளது.
பாகிஸ்தானுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3-0 என்று வென்ற கையோடு தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலியா விளையாடி வருகிறது. ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட வெஸ்ட் இண்டீஸ் 2 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள், 3 டி20 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.
இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி 17ஆம் தேதி நடந்தது. இதில் ஆஸ்திரேலியா 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில், டிராவிஸ் ஹெட் முதல் இன்னிங்ஸில் 134 பந்துகளில் 12 பவுண்டரி, 3 சிக்ஸர் உள்பட 119 ரன்கள் குவித்தார். இந்தப் போட்டியின் போதே அவருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.
இதன் காரணமாக அவர் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டிருக்கிறார். அதில், அவருக்க் கோவிட் 19 பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறது. இதில், கோவிட் 19 பாசிட்டிவ் என்று வந்திருக்கிறது. இதன் காரணமாக டிராவிஸ் ஹெட் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
இதையடுத்து வரும் 25 ஆம் தேதி வியாழக்கிழமை இரு அணிகளுக்கு இடையிலான 2ஆவது டெஸ்ட் போட்டி நடக்க இருக்கிறது. இதன் காரணமாக ஆஸ்திரேலியா வீரர்கள் பிரிஸ்பேனுக்கு செல்கின்றனர். ஆனால், ஹெட் மட்டும் பிரிஸ்பேனுக்கு வருவது நாளை காலை வரை தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அவர் குணமடைய கூடுதல் அவகாசம் அளிக்கும் வகையில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் இந்த முடிவு எடுத்துள்ளது. நாளை மாலை 5 மணிக்கு கப்பாவில் ஆஸ்திரேலியா வீரர்கள் பயிற்சியில் ஈடுபட உள்ளனர்.