Asianet News TamilAsianet News Tamil

அலெக்ஸ் கேரி, கேமரூன் க்ரீன் அபார பேட்டிங்.. முதல் ODI-யில் நியூசிலாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலியா வெற்றி

அலெக்ஸ் கேரி மற்றும் கேமரூன் க்ரீன் ஆகியோரின் அபாரமான பேட்டிங்கால் முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்தை 2 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.
 

australia beat new zealand in first odi and lead the series by 1 0
Author
First Published Sep 6, 2022, 6:17 PM IST

ஜிம்பாப்வே அணியை தொடர்ந்து நியூசிலாந்து அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவருகிறது. முதல் ஒருநாள் போட்டி இன்று நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.

ஆஸ்திரேலிய அணி:

ஆரோன் ஃபின்ச் (கேப்டன்), டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித், அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), மார்னஸ் லபுஷேன், மார்கஸ் ஸ்டோய்னிஸ், க்ளென் மேக்ஸ்வெல், கேமரூன் க்ரீன், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஸாம்பா, ஜோஷ் ஹேசில்வுட்.

இதையும் படிங்க - யாருப்பா உனக்கு மெசேஜ் பண்ணலைனு சொல்ற.. அவங்ககிட்ட நேரடியா கேட்க வேண்டியதுதானே? கோலியை விளாசிய கவாஸ்கர்

நியூசிலாந்து அணி:

மார்டின் கப்டில், டெவான் கான்வே, கேன் வில்லியம்சன் (கேப்டன்), டாம் லேதம் (விக்கெட் கீப்பர்), டேரைல் மிட்செல், மைக்கேல் பிரேஸ்வெல், ஜேம்ஸ் நீஷம், மிட்செல் சாண்ட்னெர், மேட் ஹென்ரி, லாக்கி ஃபெர்குசன், டிரெண்ட் போல்ட்.

முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர் மார்டின் கப்டில் வெறும் 6 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரரான டெவான் கான்வே சிறப்பாக பேட்டிங் ஆடிய நிலையில், 46 ரன்களுக்கு ஆடம் ஸாம்பாவின் பவுலிங்கில் ஆட்டமிழந்து 4 ரன்னில் அரைசதத்தை தவறவிட்டார். 

3 மற்றும் 4ம் வரிசைகளில் இறங்கி பொறுப்புடன் ஆடிய கேன் வில்லியம்சன் (45) மற்றும் டாம் லேதம் (43) ஆகிய இருவரையும் க்ளென் மேக்ஸ்வெல் தனது சுழலில் வீழ்த்தினார். டேரைல் மிட்செல் (26) மற்றும் பிரேஸ்வெல்(7) ஆகியோரையும் மேக்ஸ்வெல்லே வீழ்த்தினார். நியூசிலாந்து அணியின் மிடில் ஆர்டர் பேட்டிங்கை மொத்தமாக கொத்தாக வீழ்த்தினார் மேக்ஸ்வெல். 

அதன்பின்னர் ஹேசில்வுட் 3 விக்கெட்டுகளை வீழ்த்த, 50 ஓவரில் 232 ரன்கள் அடித்து, 233 ரன்கள் என்ற எளிய இலக்கை ஆஸ்திரேலியாவிற்கு நிர்ணயித்தது நியூசிலாந்து அணி. ஆஸ்திரேலிய அணியில் அபாரமாக பந்துவீசிய க்ளென் மேக்ஸ்வெல் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதையும் படிங்க - https://tamil.asianetnews.com/sports-cricket/team-india-probable-playing-eleven-for-the-super-4-match-against-sri-lanka-in-asia-cup-2022-rhsb6w

233 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய ஆஸ்திரேலிய அணி, டிரெண்ட் போல்ட் மற்றும் மேட் ஹென்ரியின் வேகத்தை சமாளிக்க முடியாமல் 44 ரன்களுக்கே, டேவிட் வார்னர் (20), ஆரோன் ஃபின்ச்(5), ஸ்டீவ் ஸ்மித் (1), மார்னஸ் லபுஷேன் (0) மற்றும் மார்கஸ் ஸ்டோய்னிஸ்(5) ஆகிய 5 முக்கியமான விக்கெட்டுகளை இழந்துவிட்டது. இதில் 3 பேரை டிரெண்ட் போல்ட்டும், 2 பேரை மேட் ஹென்ரியும் வீழ்த்தினர்.

அதன்பின்னர் அலெக்ஸ் கேரியும் கேமரூன் க்ரீனும் இணைந்து அபாரமாக பேட்டிங் ஆடி இருவருமே அரைசதம் அடித்து, 6வது விக்கெட்டுக்கு 158 ரன்களை குவித்தனர். அபாரமாக ஆடிய அலெக்ஸ் கேரி 85 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 89 ரன்கள் அடித்த கேமரூன் க்ரீன் கடைசி வரை களத்தில் நின்று போட்டியை முடித்து கொடுத்தார்.  அலெக்ஸ் கேரி மற்றும் க்ரீன் ஆகிய இருவரின் பொறுப்பான பேட்டிங்கால் 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது ஆஸ்திரேலிய அணி.

இதன்மூலம், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என ஆஸ்திரேலிய அணி முன்னிலை வகிக்கிறது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios