Asianet News TamilAsianet News Tamil

இலங்கைக்கு எதிரான போட்டிக்கான இந்திய அணியில் அதிரடி மாற்றங்கள்! சீனியர் வீரருக்கு அழைப்பு.. உத்தேச ஆடும் லெவன்

ஆசிய கோப்பையில் இலங்கைக்கு எதிரான சூப்பர் 4 சுற்று போட்டியில் இன்று களமிறங்கும் இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
 

team india probable playing eleven for the super 4 match against sri lanka in asia cup 2022
Author
First Published Sep 6, 2022, 4:14 PM IST

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்தியா, பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான், இலங்கை அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறின.

சூப்பர் 4 சுற்றில் ஆஃப்கானிஸ்தானை வீழ்த்தி இலங்கை அணியும், இந்தியாவை வீழ்த்தி பாகிஸ்தான் அணியும் வெற்றி பெற்றுள்ள நிலையில், இன்றைய ஆட்டத்தில் இந்தியாவும் இலங்கையும் மோதுகின்றன.

இதையும் படிங்க - இதுதான் நீ பேட்டிங் ஆடுற லெட்சணமா..? டிரெஸிங் ரூமில் ரிஷப் பண்ட்டை விளாசிய கேப்டன் ரோஹித் சர்மா.. வைரல் வீடியோ

பாகிஸ்தானிடம் தோற்ற இந்திய அணி, ஃபைனலுக்கு முன்னேற வேண்டுமெனில், இலங்கை மற்றும் ஆஃப்கானிஸ்தான் ஆகிய 2 அணிகளையுமே வீழ்த்தி வெற்றி பெற்றாக வேண்டும். அந்தவகையில், முக்கியமான போட்டியில் இன்று இலங்கையை எதிர்கொள்கிறது இந்திய அணி. 

துபாயில் நடக்கும் இந்த போட்டி இந்திய அணிக்கு நாக் அவுட் போட்டியாகும். இந்த போட்டியில் களமிறங்கும் இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம். 

இலங்கை வீரர்கள் ஸ்பின் பவுலிங்கை திறம்பட எதிர்கொள்ள வல்லவர்கள். எனவே தரமான ஸ்பின்னர் தேவை என்ற வகையில், சீனியர் ஸ்பின்னரான ரவிச்சந்திரன் அஷ்வின் இந்த போட்டியில் ஆட வாய்ப்புள்ளது. அதனால் இளம் ரிஸ்ட் ஸ்பின்னர் ரவி பிஷ்னோய் இந்த போட்டியில் உட்காரவைக்கப்படுவார். 

சீனியர் ரிஸ்ட் ஸ்பின்னர் யுஸ்வேந்திர சாஹல் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அதிகமான ரன்களை வாரி வழங்கியிருந்தாலும், அனுபவ ஸ்பின்னர் என்ற வகையில் சாஹல் கண்டிப்பாக ஆடுவார்.

இதையும் படிங்க - பக்கா பிளானுடன் ஐபிஎல்லில் இருந்து ஓய்வு பெற்ற சுரேஷ் ரெய்னா..! அந்நிய மண்ணில் அதகளம் செய்யப்போகும் சின்ன தல

கடந்த போட்டியில் கூடுதல் பேட்ஸ்மேனாக ஆடிய தீபக் ஹூடா உட்காரவைக்கப்பட்டு, ஃபாஸ்ட் பவுலர் ஆவேஷ் கான் சேர்க்கப்படலாம். 

உத்தேச இந்திய அணி:

ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல் (துணை கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ரவிச்சந்திரன் அஷ்வின், புவனேஷ்வர் குமார், யுஸ்வேந்திர சாஹல், ஆவேஷ் கான், அர்ஷ்தீப் சிங்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios