Asianet News TamilAsianet News Tamil

#NZvsAUS ஆஸி., அடிச்ச ரன்னே கொஞ்சம்.. அதுல 50 ரன் வித்தியாசத்தில் வெற்றி..! நியூசி., படுமோசமான சொதப்பல்

நியூசிலாந்துக்கு எதிரான 4வது டி20 போட்டியில் 50 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது ஆஸ்திரேலிய அணி.
 

australia beat new zealand by 50 runs in 4th t20
Author
Wellington, First Published Mar 5, 2021, 3:05 PM IST

ஆஸ்திரேலிய அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவருகிறது. முதலிரண்டு டி20 போட்டிகளிலும் நியூசிலாந்து அணி வெற்றி பெற்ற நிலையில், 3வது போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. 

4வது டி20 போட்டி வெலிங்டனில் இன்று நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் ஃபின்ச்சை தவிர வேறு யாருமே சரியாக பேட்டிங் ஆடவில்லை.

மேத்யூ வேட்(14), ஜோஷ் ஃபிலிப்(13), க்ளென் மேக்ஸ்வெல்(18), ஸ்டோய்னிஸ்(19) என ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிய, மறுமுனையில் நிலைத்து நின்று அடித்து ஆடிய கேப்டன் ஃபின்ச், அரைசதம் அடித்தார். 55 பந்தில் 5 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 79 ரன்கள் அடித்து கடைசி வரை களத்தில் இருந்தார். ஃபின்ச்சின் அரைசதத்தால் 20 ஓவரில் 156 ரன்கள் அடித்தது ஆஸ்திரேலிய அணி.

australia beat new zealand by 50 runs in 4th t20

157 ரன்கள் என்ற எளிய இலக்கை விரட்டிய நியூசிலாந்து அணி தொடக்கம் முதலே சீரான இடைவெளியில் மளமளவென விக்கெட்டுகளை இழந்தது. நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர் கப்டில் 7 ரன்னிலும் கேப்டன் வில்லியம்சன் 8 ரன்னிலும் மற்றொரு தொடக்க வீரரான டிம் சேஃபெர்ட் 19 ரன்னிலும் கான்வே 17 ரன்னிலும் ஆட்டமிழக்க, க்ளென் ஃபிலிப்ஸ்(1), ஜிம்மி நீஷம்(3), மிட்செல் சாண்ட்னெர்(3) ஆகியோர் ஒற்றை இலக்கத்தில் வெளியேறினர்.

9ம் வரிசையில் பேட்டிங் இறங்கிய கைல் ஜாமிசன் 18 பந்தில் 5 பவுண்டரிகளுடன் 30 ரன்கள் அடித்து கடைசி விக்கெட்டாக ஆட்டமிழக்க, 18.5 ஓவரில் 106 ரன்களுக்கே சுருண்டது நியூசிலாந்து அணி. இதையடுத்து 50 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது ஆஸ்திரேலிய அணி.
 

Follow Us:
Download App:
  • android
  • ios