சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்து அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளது. 352 ரன்களை சேஸ் செய்த ஆஸி. அணியின் ஜோஸ் இங்கிலிஸ் சதம் அடித்து வெற்றிக்கு வித்திட்டார்.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியின் 4வது போட்டியில் ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்து அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளது. 352 ரன்களை சேஸ் செய்த ஆஸி. அணி அந்த வெற்றியின் மூலம் புதிய வரலாறு படைத்துள்ளது.

ஆஸி. அணியின் பேட்டிங்கில் ஜோஸ் இங்கிலிஸ் வேற லெவல் ஆட்டத்தை வெளிப்படுத்தி செஞ்சுரி அடித்தார். இங்கிலாந்து அணியின் பந்து வீச்சை துவம்சம் செய்த அவர் அலெக்ஸ் கேரியோடு சேர்ந்து பார்ட்னர்ஷிப் அமைத்தார். இருவரும் இணைந்து 146 ரன்கள் குவித்தனர். கேரி அவுட்டான பிறகும் இங்கிலிஸ் மேக்ஸ்வெல்லுடன் சேர்ந்து வெற்றிகரமாக போட்டியை முடித்து வைத்தார்.

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் சேஸ் செய்து ஜெயித்த அதிகபட்ச ஸ்கோர் இதுதான். இந்தத் தொடரில் அதிக ரன் எடுத்த அணியும் ஆஸ்திரேலியாதான்.

லாகூரில் நடந்த இந்த குரூப் பி போட்டியில் ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் டாஸ் ஜெயிச்சு பௌலிங் செய்ய முடிவு செய்தார். இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 351 ரன்கள் சேர்த்தது. பேட்டிங்கில் அசத்திய இங்கிலாந்து வீரர் பென் டக்கெட் 17 பவுண்டரி, 3 சிக்ஸர் உள்பட 165 ரன்கள் அடித்தார். அடுத்து ஜோ ரூட் 68 எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் நடையைக் கட்டினர்.

Scroll to load tweet…

ஆஸ்திரேலியா பௌலிங்ல பென் டுவார்ஷுயிஸ் 10 ஓவர்ல 66 ரன் குடுத்து 3 விக்கெட் எடுத்தாரு. ஆடம் ஜாம்பா, லாபுஷேன் ரெண்டு பேரும் 2 விக்கெட் எடுத்தாங்க. க்ளென் மேக்ஸ்வெல் ஒரு விக்கெட் எடுத்தாரு.

352 ரன்ன சேஸ் பண்ண ஆஸ்திரேலியா 47.3 ஓவர்ல 5 விக்கெட் இழந்து ஜெயிச்சுட்டாங்க. ஜோஸ் இங்கிலிஸ் 86 பால்ல 120 ரன் அடிச்சாரு. 8 பவுண்டரி, 6 சிக்ஸர் அடிச்சாரு. அலெக்ஸ் கேரி 69, மேத்யூ ஷாட் 63, லாபுஷேன் 47, க்ளென் மேக்ஸ்வெல் 32, டிராவிஸ் ஹெட் 6, ஸ்டீவ் ஸ்மித் 5 ரன் எடுத்தாங்க. சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றிலேயே இதுதான் பெரிய ரன் சேஸ்.

Scroll to load tweet…

இங்கிலாந்து அணியின் பௌலிங்கில் யாருமே சரியாக சோபிக்கவில்லை. மார்க் வுட், ஜோஃப்ரா ஆர்ச்சர், பிராண்டன் கார்ஸ், ஆதில் ரஷீத், லியாம் லிவிங்ஸ்டன் ஆகியோர் தலா ஒரு விக்கெட் மட்டுமே எடுத்தார்கள்.