Asia Cup 2025: IND vs PAK: ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா முதலில் பவுலிங் செய்கிறது. இந்திய அணியில் 2 அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்று போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் விளையாடுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற கேப்டன் சூர்யகுமார் யாதவ் இந்திய அணி முதலில் பவுலிங் செய்யும் என அறிவித்தார். அதன்படி பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது. இந்திய அணியில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

இந்திய அணியில் 2 மாற்றங்கள்

அதாவது ஓமனுக்கு எதிரான போட்டியில் விளையாடாத வருண் சக்கரவர்த்தி வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ராணாவுக்கு பதிலாகவும், அர்ஷ்தீப் சிங்கிற்குப் பதிலாக ஜஸ்பிரித் பும்ராவும் பிளேயிங் லெவனில் விளையாடுகின்றனர். குரூப் போட்டியைப் போலவே, டாஸ் வென்ற பிறகும் பாகிஸ்தான் கேப்டன் சல்மான் ஆகாவுடன் இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் இந்த முறையும் கைகுலுக்கவில்லை.

சஞ்சு சாம்சன் எங்கு இறங்குவார்?

இந்திய அணியை பொறுத்தவரை சுப்மன் கில் மற்றும் அபிஷேக் ஷர்மா தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்குகின்றனர். சூர்யகுமார் யாதவ் மூன்றாவது இடத்திலும், திலக் வர்மா அடுத்த இடத்திலும் களமிறங்குவார்கள். சஞ்சு சாம்சன் ஐந்தாவது இடத்தில் பேட்டிங் செய்வார். அவரைத் தொடர்ந்து ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே மற்றும் அக்சர் படேல் களமிறங்க உள்ளனர்.

இந்தியா, பாகிஸ்தான் பிளேயிங் லெவன்

இந்திய அணி பிளேயிங் லெவன்: அபிஷேக் ஷர்மா, சுப்மன் கில், சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), திலக் வர்மா, சஞ்சு சாம்சன், ஷிவம் துபே, ஹர்திக் பாண்ட்யா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா மற்றும் வருண் சக்கரவர்த்தி.

பாகிஸ்தான் அணி பிளேயிங் லெவன்: சயிம் அயூப், சாஹிப்சாதா ஃபர்ஹான், முகமது ஹாரிஸ், ஃபக்கர் ஜமான், சல்மான் ஆகா (கேப்டன்), குஷ்தில் ஷா, ஹசன் நவாஸ், முகமது நவாஸ், ஷஹீன் அப்ரிடி, ஹாரிஸ் ரவுஃப் மற்றும் அப்ரார் அகமது.