ஆசிய கோப்பை 2023 அட்டவணை வெளியீடு: இந்தியா – பாகிஸ்தான் 3 முறை மோத வாய்ப்பு!
பாகிஸ்தான் மற்றும் இலங்கை இணைந்து நடத்தும் ஆசிய கோப்பை 2023 தொடருக்கான அட்டவணை தற்போது வெளியாகியுள்ளது.
பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் இணைந்து நடத்தும் ஆசிய கோப்பை 2023 தொடருக்கான அட்டவணை தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி வரும் ஆகஸ்ட் 30 ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 17 ஆம் தேதி வரையில் நடக்கிறது. இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம், இலங்கை மற்றும் நேபாள் ஆகிய 6 அணிகள் மோதுகின்றன. இதில், இந்தியா, பாகிஸ்தான் மற்றும் நேபாள் ஆகிய அணிகள் குரூப் ஏ பிரிவிலும், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய அணிகள் குரூப் பி பிரிவிலும் இடம் பெற்றுள்ளன. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோதும். முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறும்.
500ஆவது போட்டியில் சாதிக்க காத்திருக்கும் விராட் கோலி!
இதனால் சூப்பர் 4 சுற்றிலும் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் விளையாடும் வாய்ப்பு உருவாகியுள்ளது. அப்படி இரு அணிகளும் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறினால், செப்.10 ஆம் தேதி மீண்டும் இந்தியா - பாகிஸ்தான் போட்டி நடக்க வாய்ப்புகள் உள்ளது. அதுமட்டுமல்லாமல் இரு அணிகளும் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் பட்சத்தில் செப்.17ஆம் தேதி நடக்கும் போட்டியிலும் மீண்டும் மோதுவதற்கான வாய்ப்புகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆஷஸ் 4ஆவது டெஸ்ட்: தொடரை கைப்பற்றுமா ஆஸ்திரேலியா? இங்கிலாந்து பவுலிங்!
இந்த ஆசிய கோப்பை தொடர் உலகக் கோப்பை தொடருக்கான ஒரு முன்னோட்டமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா போட்டிகள்:
செப்டம்பர் 2, சனிக்கிழமை – இந்தியா – பாகிஸ்தான் - கண்டி, இலங்கை
செப்டம்பர் 4, திங்கள்கிழமை – இந்தியா – நேபாள் – கண்டி, இலங்கை
பாகிஸ்தான் போட்டிகள்:
ஆகஸ்ட் 30, புதன்கிழமை – பாகிஸ்தான் – இந்தியா – முல்தான், பாகிஸ்தான்
செப்டம்பர் 2, சனிக்கிழமை – பாகிஸ்தான் – இந்தியா – கண்டி, இலங்கை
செப்டம்பர் 2ல் இந்தியா – பாகிஸ்தான் பலப்பரீட்சை: ஆசிய கோப்பை அட்டவணை இன்று இரவு வெளியாக வாய்ப்பு!