2019 உலக கோப்பை ஃபைனல் மாதிரி ஒரு கிரிக்கெட் போட்டியை பார்ப்பது ரொம்ப அரிது. வெற்றி தோல்விக்கு அப்பாற்பட்டு வரலாற்றில் இடம்பிடித்த போட்டி அது. மிகவும் பரபரப்பான அந்த போட்டியை நேரலையில் பார்த்தவர்களுக்கு ரத்த அழுத்தமே அதிகரித்திருக்கும். அந்தளவிற்கு அடுத்தடுத்த திருப்பங்கள் ஏற்பட்டுக்கொண்டே இருந்தன. 

போட்டி டிரா ஆனதை அடுத்து சூப்பர் ஓவர் வீசப்பட்டது. சூப்பர் ஓவரும் டிரா ஆனதை அடுத்து, அதிக பவுண்டரிகளை அடித்த அணி என்ற வகையில் இங்கிலாந்து அணி கோப்பையை வென்றது.

இந்த போட்டியை இங்கிலாந்து டெஸ்ட் வீரர் ஸ்டூவர்ட் பிராட் டிவியில் பார்த்துக்கொண்டிருக்கும்போது அடுத்தடுத்த திருப்பங்களில் அவர் கொடுத்த ரியாக்‌ஷன்களை அஷ்வின் வீடியோவாக எடுத்துள்ளார். கவுண்டி கிரிக்கெட்டில் ஆடிவரும் அஷ்வின், ஸ்டூவர்ட் பிராட் ஆடும் நாட்டிங்காம்ஷைர் அணியில் தான் ஆடிவருகிறார். எனவே ட்ரெஸிங் ரூமில் ஃபைனலை பார்த்துக்கொண்டிருந்த பிராடின் ரியாக்‌ஷன்களை அஷ்வின் வீடியோவாக எடுத்துள்ளார். அதை பிராட் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.