2018 மற்றும் 2019 ஆகிய கடந்த இரண்டு சீசன்களிலும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டனாக இருந்த அஷ்வினை அந்த அணி கழட்டிவிட்டுள்ளது. டெல்லி கேபிடள்ஸ் அணியுடன் பரஸ்பர புரிதலுடன் வீரர்களை பரிமாற்றி கொண்டுள்ளது. அஷ்வினை டெல்லி அணிக்கு கொடுத்துவிட்டு, டெல்லி அணியிடமிருந்து ஜெகதீஷா சுஜித்தையும் கூடுதலாக ஒன்றரை கோடி ரூபாயையும் பெற்றுள்ளது. 

சிஎஸ்கே மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளில் ஆடிய அஷ்வின், அடுத்த சீசனில் டெல்லி கேபிடள்ஸ் அணிக்காக ஆடவுள்ளார். டெல்லி அணிக்கு மாறியுள்ள அஷ்வின், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அஷ்வின், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் ஆடியது சிறந்த அனுபவம். பஞ்சாப் அணியில் என்னுடன் ஆடிய சக வீரர்களை அடுத்த சீசனில் மிஸ் செய்வேன். புதிய சவால்களுக்கு  காத்திருக்கிறேன். கடந்த இரண்டு ஆண்டுகளாக பேராதரவு அளித்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் ரசிகர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்வதாக அஷ்வின் தெரிவித்தார்.