தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடர் கடந்த 19ம் தேதி தொடங்கி நடந்துவருகிறது. 

தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் முதல் போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 115 ரன்கள் அடித்தது. அந்த அணியின் சார்பில் கேப்டன் அஷ்வின் அதிகபட்சமாக 37 ரன்கள் அடித்தார். 

116 ரன்கள் என்ற எளிய இலக்குடன் ஆடிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 105 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. சேப்பாக் அணியை 105 ரன்களுக்கு சுருட்டி 10 ரன்கள் வித்தியாசத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி வெற்றி பெற்றது. 

இந்த போட்டியில் கையை முழுவதுமாக சுழற்றாமல் ஒரு பந்தை வீசினார் அஷ்வின். பேட்ஸ்மேனை குழப்புவதற்காக அப்படியொரு பந்தை அஷ்வின் வீசினார். பந்து ஆக்‌ஷன் த்ரோ போல் இல்லாததால் அந்த பந்து ஐசிசி விதிப்படி தவறான பந்து அல்ல, சரியான பந்துதான். அந்த பந்து பேட்ஸ்மேனை குழப்புவதற்காக வீசப்பட்டாலும் அந்த பந்தை சுதாரித்து ஆடிவிட்டார் பேட்ஸ்மேன். அஷ்வின் வீசிய அந்த பந்தின் வீடியோ இதோ..