பிப்ரவரி மாதத்திற்கான சிறந்த வீரருக்கான விருதுக்கு 3 வீரர்கள் நாமினேட் ஆகியுள்ளனர். அவர்களில் இந்திய அணியின் சீனியர் ஸ்பின் ஆல்ரவுண்டரான அஷ்வினும் ஒருவர். 

ஆண்டின் சிறந்த வீரர்களை தேர்வு செய்து விருது வழங்கி அங்கீகரித்து வந்த ஐசிசி, இந்த ஆண்டிலிருந்து ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரரை தேர்வு செய்துவருகிறது. அந்தவகையில், ஜனவரி மாதத்தின் சிறந்த வீரராக ரிஷப் பண்ட் தேர்வு செய்யப்பட்டார். ஆஸி.,க்கு எதிரான பிரிஸ்பேன் டெஸ்ட்டில் அசத்தலாக ஆடிய ரிஷப் பண்ட் அந்த விருதை வென்றார்.

பிப்ரவரி மாதத்திற்கான ஐசிசியின் சிறந்த வீரர் விருதுக்கு 3 வீரர்கள் நாமினேட் ஆகியுள்ளனர். இந்தியா இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் போட்டிகளில் அசத்தலாக ஆடிய இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் மற்றும் இந்திய சீனியர் ஸ்பின் ஆல்ரவுண்டரான அஷ்வின் ஆகிய இருவரும் நாமினேட் ஆகியுள்ளனர். இவர்களுடன் 3வது வீரராக வெஸ்ட் இண்டீஸின் கைல் மேயர்ஸும் அந்த லிஸ்ட்டில் உள்ளார்.

Scroll to load tweet…

* ஜோ ரூட் - 218 ரன்கள், 6 விக்கெட்டுகள்.

* அஷ்வின் 106 ரன்கள், 24 விக்கெட்டுகள்.

* வெஸ்ட் இண்டீஸ் வீரர் கைல் மேயர்ஸ் 261 ரன்கள்.

இவர்கள் மூவரில் யார் அந்த விருதுக்கு தகுதியானவர்கள் என்று ரசிகர்கள் கருதுகிறார்களோ, அவர்கள் வாக்களிக்கலாம்.