Asianet News TamilAsianet News Tamil

டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கான இந்திய அணியின் பவுலிங் யூனிட்..! முன்னாள் ஃபாஸ்ட் பவுலரின் தரமான தேர்வு

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் நியூசிலாந்தை எதிர்கொள்ளும் இந்திய அணியின் பவுலிங் யூனிட் குறித்து இந்திய அணியின் முன்னாள் ஃபாஸ்ட்பவுலர் ஆஷிஸ் நெஹ்ரா கருத்து தெரிவித்துள்ளார்.
 

ashish nehra opines on team india bowling unit for icc world test championship final
Author
Chennai, First Published May 19, 2021, 7:43 PM IST

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் வரும் ஜூன் 18-22ல் நடக்கிறது. இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் மோதுகின்றன. அதற்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டது.

இந்திய அணி:

விராட் கோலி(கேப்டன்), ரஹானே(துணை கேப்டன்), ரோஹித் சர்மா, ஷுப்மன் கில், மயன்க் அகர்வால், புஜாரா, ஹனுமா விஹாரி, ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்), அஷ்வின், ஜடேஜா, அக்ஸர் படேல், வாஷிங்டன் சுந்தர், பும்ரா, இஷாந்த் சர்மா, ஷமி, சிராஜ், ஷர்துல் தாகூர், உமேஷ் யாதவ்.

ashish nehra opines on team india bowling unit for icc world test championship final

கேஎல் ராகுல், ரிதிமான் சஹா.(உடற்தகுதி கண்காணிக்கப்படுகிறது)

ஸ்டாண்ட்பை வீரர்கள் - அபிமன்யூ ஈஸ்வரன், ஆவேஷ் கான், பிரசித் கிருஷ்ணா, அர்ஸான் நாக்வஸ்வாலா

நியூசிலாந்துக்கு எதிரான ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் களமிறங்கும் இந்திய அணியின் பவுலிங் யூனிட் குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆஷிஸ் நெஹ்ரா, பிட்ச் பசுமையாக இருந்தால் கூடுதல் ஃபாஸ்ட் பவுலராக முகமது சிராஜை இறக்கலாம். அப்படியில்லை என்றால், பும்ரா, ஷமி, இஷாந்த் சர்மா ஆகிய மூவரும் தான் ஃபாஸ்ட் பவுலர்கள். அவர்களுடன் அஷ்வின் மற்றும் ஜடேஜா ஆகிய இருவரும் ஸ்பின்னர்களாக ஆடுவார்கள். ஜடேஜாவும் அஷ்வினும் ஆடினால், பவுலிங் யூனிட் பூர்த்தியடைந்துவிடும் என்று நெஹ்ரா தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios