Asianet News TamilAsianet News Tamil

உலக கோப்பையில் இவருதான் இந்தியாவின் மிகப்பெரிய சொத்து!! சும்மா தெறிக்கவிட போறாரு பாருங்க

இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆகிய இரு அணிகளுமே ஆக்ரோஷமாக ஆடிவருகிறது. இந்த 2 அணிகளை தவிர நியூசிலாந்து அணியும் சிறந்த கிரிக்கெட்டை ஆடிவருகிறது. ஸ்மித்தும் வார்னரும் ஆஸ்திரேலிய அணிக்கு திரும்பிவிட்டால் அந்த அணியும் வலுவானதாகிவிடும். 
 
ashish nehra believes shami will be the biggest asset for india in world cup
Author
India, First Published Mar 4, 2019, 10:43 AM IST

உலக கோப்பையை வெல்லும் பிரதான அணிகளில் ஒன்றாக இந்திய அணி பார்க்கப்படுகிறது. கோலி தலைமையிலான இந்திய அணி மற்றும் இயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி ஆகிய 2 அணிகளில் ஒன்றே உலக கோப்பையை வெல்லும் அணியாக முன்னாள் ஜாம்பவான்களால் பார்க்கப்படுகிறது. 

ashish nehra believes shami will be the biggest asset for india in world cup

இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆகிய இரு அணிகளுமே ஆக்ரோஷமாக ஆடிவருகிறது. இந்த 2 அணிகளை தவிர நியூசிலாந்து அணியும் சிறந்த கிரிக்கெட்டை ஆடிவருகிறது. ஸ்மித்தும் வார்னரும் ஆஸ்திரேலிய அணிக்கு திரும்பிவிட்டால் அந்த அணியும் வலுவானதாகிவிடும். 

ashish nehra believes shami will be the biggest asset for india in world cup

இந்த உலக கோப்பையில் இந்திய அணியின் மிகப்பெரிய பலம் பவுலிங். பொதுவாக நல்ல பேட்டிங் அணியாகவே திகழ்ந்த இந்திய அணி தற்போது சிறந்த பவுலிங் அணியாகவும் திகழ்கிறது. பும்ரா, ஷமி ஆகிய இருவரும் வேகத்தில் மிரட்டுகின்றனர். குல்தீப் யாதவ் சுழலில் எதிரணிகளை தெறிக்கவிடுகிறார். 

ashish nehra believes shami will be the biggest asset for india in world cup

தனது சொந்த வாழ்க்கையில் பல பிரச்னைகளை எதிர்கொண்ட ஷமி, கடந்த சில மாதங்களுக்கு முன் மீண்டும் அணியில் இணைந்தார். பிரச்னைகளிலிருந்து மீண்டு மீண்டும் அணியில் இணைந்த ஷமி, தற்போது பவுலிங்கில் மிரட்டுகிறார். நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் அபாரமாக பந்துவீசி தொடர் நாயகன் விருதை வென்றார். டெஸ்ட் மற்றும் ஒருநாள் ஆகிய இரண்டு போட்டிகளிலுமே அபாரமாக வீசிவருகிறார். 

ashish nehra believes shami will be the biggest asset for india in world cup

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்துவரும் ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் அபாரமாக வீசி 2 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு, அவரது பந்தில் ரன் அடிக்க விடாமல் நெருக்கடியை ஏற்படுத்தினார். ஷமியின் பவுலிங் நல்ல வேகத்துடன் ஸ்விங் ஆகிறது. எனவே பும்ராவுடன் சேர்த்து அவரது பவுலிங் உலக கோப்பையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ashish nehra believes shami will be the biggest asset for india in world cup

புவனேஷ்வர் குமார் - பும்ரா ஜோடிதான் வேகப்பந்து ஜோடியாக திகழ்ந்தது. ரிசர்வ் வேகப்பந்து வீச்சாளராகத்தான் மீண்டும் அணியில் இணைந்தார் ஷமி. ஆனால் தற்போதைய சூழலில் ஷமி - பும்ரா ஜோடி நிரந்தர ஃபாஸ்ட் பவுலிங் ஜோடியாக உருவெடுத்துவிட்டது. உலக கோப்பையில் பெரும்பாலும் புவனேஷ்வர் குமார் பென்ச்சில் உட்கார வைக்கப்பட வாய்ப்புள்ளது. பெரும்பாலான போட்டிகளில் புவனேஷ்வர் குமாரைவிட ஷமிதான் ஆடும் லெவனில் எடுக்கப்பட வாய்ப்புள்ளது. அந்தளவிற்கு விஸ்வரூபம் எடுத்துவிட்டார் ஷமி. 

ashish nehra believes shami will be the biggest asset for india in world cup

இந்நிலையில், உலக கோப்பை தொடரில் ஷமி இந்திய அணியின் மிகப்பெரிய சொத்தாக திகழ்வார் என முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆஷீஸ் நெஹ்ரா கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள நெஹ்ரா, முகமது ஷமி அபாரமாக வீசுகிறார். உண்மையாகவே அவரது பவுலிங்கின் மூலம் கவர்ந்திழுத்துவிட்டார். கடந்த 2018ம் ஆண்டின் தொடக்கத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரிலிருந்தே அபாரமாக வீசிவருகிறார். டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகவும் சிறப்பாக வீசுகிறார். உடலளவில் ஃபிட்டாகவும் இருக்கிறார். உலக கோப்பை தொடரில் அவர்தான் இந்திய அணியின் மிகப்பெரிய சொத்தாக திகழ்வார் என்று நெஹ்ரா நம்பிக்கை தெரிவித்துள்ளார். 
 
Follow Us:
Download App:
  • android
  • ios