ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையேயான ஆஷஸ் தொடருக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே பாரம்பரியமாக ஆஷஸ் தொடர் நடத்தப்பட்டுவருகிறது. 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரை இரு அணிகளுமே உலக கோப்பைக்கு நிகராக மதிக்கின்றன.
சர்வதேச அளவில் கிரிக்கெட் ரசிகர்களாலும் ஆஷஸ் தொடர் ஆர்வமாக உற்றுநோக்கப்படுகிறது. இந்நிலையில், இந்த ஆண்டுக்கான ஆஷஸ் தொடருக்கான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
2019ம் ஆண்டு ஆஷஸ் தொடர் இங்கிலாந்தில் நடந்த நிலையில், இம்முறை ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ளது. டிசம்பர் 8 முதல் ஜனவரி 18 வரை ஆஷஸ் தொடர் நடக்கிறது. டிசம்பர் 8ம் தேதி தொடங்கும் முதல் போட்டி பிரிஸ்பேனில் நடக்கவுள்ளது.
அடிலெய்டில் நடக்கும் 2வது டெஸ்ட் பகலிரவு போட்டியாக நடக்கிறது. 3வது டெஸ்ட் பாக்ஸிங் டே டெஸ்ட்; மெல்போர்னில் நடக்கும். புதுவருடம் தொடங்கியதும் சிட்னியில் நடக்கும் பிங்க் டெஸ்ட் ஜனவரி 5ம் தேதி தொடங்குகிறது. கடைசி டெஸ்ட் பெர்த்தில் நடக்கிறது.
