ஐபிஎல் 12வது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. நேற்றுடன் லீக் சுற்று முடிந்த நிலையில், தகுதிச்சுற்று நாளை தொடங்குகிறது. 

மும்பை இந்தியன்ஸ், சிஎஸ்கே, டெல்லி கேபிடள்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஆகிய நான்கு அணிகளும் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளன. மும்பைக்கு எதிரான நேற்றைய போட்டியில் வெற்றி பெற்றால் பிளே ஆஃபிற்கு தகுதி பெற்றுவிடலாம் என்ற நிலையில், மும்பையை எதிர்கொண்ட கேகேஆர் அணி படுதோல்வி அடைந்ததால், சன்ரைசர்ஸ் அணி நெட் ரன்ரேட்டின் அடிப்படையில் பிளே ஆஃபிற்கு தகுதிபெற்றது. 

மும்பை இந்தியன்ஸ் மற்றும் கேகேஆர் அணிகளுக்கு இடையே மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடந்த போட்டி ஒருசார்பான போட்டியாக அமைந்தது. கேகேஆர் அணி வீரர்கள் ஈடுபாட்டுடன் ஆடவேயில்லை. அவர்கள் அணியில் சில பல சிக்கல்கள் இருப்பதால் அவர்கள் வெற்றி பெறவே ஆடவில்லை. சும்மா கடமைக்காக ஆடியதுபோலத்தான் இருந்தது. 

பவுலிங், பேட்டிங் என அனைத்திலுமே படுமோசமாக சொதப்பினர். வெறும் 133 ரன்களை மட்டுமே அடித்து 134 ரன்கள் என்ற இலக்கை 17வது ஓவரிலேயே எட்டவிட்டு படுதோல்வியடைந்தது கேகேஆர். இந்த போட்டி முழுவதுமே மும்பை அணியின் கை ஓங்கியிருந்தது. டி காக்கின் விக்கெட்டை மட்டுமே இழந்து 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை அணி வென்றது. 

134 ரன்கள் என்ற எளிய இலக்கை விரட்டிய மும்பை அணிக்கு அதன் தொடக்க வீரர் குயிண்டன் டி காக் அதிரடியான தொடக்கத்தை அமைத்து கொடுத்தார். அதிலும் ஆண்ட்ரே ரசலின் ஓவரை வெளுத்து வாங்கிவிட்டார் டி காக். ஆண்ட்ரே ரசல் வீசிய 2வது ஓவரில் 2 சிக்ஸர்கள் மற்றும் ஒரு பவுண்டரி அடித்தார் டி காக். அந்த ஓவரில் ரோஹித் ஒரு பவுண்டரி அடிக்க, அந்த ஓவரில் மட்டும் 21 ரன்கள் குவிக்கப்பட்டது. 

டி காக்கின் அதிரடியால் அதிருப்தியும் ஆத்திரமும் அடைந்த ஆண்ட்ரே ரசல், டி காக் தான் ரசலின் கேட்ச்சையும் பிடித்தார். ரசலை அவுட்டாக்கியத்து மட்டுமல்லாமல் அவரது பவுலிங்கில் தாறுமாறாக அடித்ததால் கோபமடைந்த ரசல், அந்த ஓவர் முடிந்து செல்லும்போது டி காக்கின் மீது வேண்டுமென்றே லேசாக மோதிவிட்டு சென்றார். போட்டி முடிந்ததும் இஷான் கிஷானுக்கு டி காக் பேட்டியளித்தார். அப்போது ஆண்ட்ரே ரசலின் பவுலிங்கை அடித்தது குறித்து கூறும்போது, ரசலின் பவுலிங்கை நான் அடித்து ஆடியதை அடுத்து என் மீது ரசல் கோபப்பட்டிருப்பார் என்று நினைக்கிறேன் என டி காக் தெரிவித்துள்ளார். ரசல் அதிருப்தியடைந்தது உண்மைதான்.