ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைந்து முழுசா 10 நாட்கள் கூட ஆகாத நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர் அம்பதி ராயுடு கட்சியிலிருந்தும், அரசியலிலிருந்தும் சிறிது காலம் ஒதுங்குதாக அறிவித்துள்ளார்.
கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்று விளையாடியவர் ஆந்திராவைச் சேர்ந்த அம்பதி ராயுடு. கடந்த ஆண்டு நடந்து முடிந்த ஐபிஎல் 2023 தொடரின் இறுதிப் போட்டியில் அம்பதி ராயுடு 19 ரன்கள் எடுத்தார். இந்த தொடரில் சிஎஸ்கே அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 5 ஆவது முறையாக சாம்பியனானது.
இந்த தொடருடன் அம்பதி ராயுடு ஐபிஎல் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார். இதையடுத்து, ஆந்திரா மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியை சந்தித்து பேசினார். அப்போதே அம்பதி ராயுடு ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைய இருக்கிறார் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் தான் கடந்த 28ஆம் தேதி அம்பதி ராயுடு ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
T20 World Cup 2024 Schedule: இந்தியா, பாகிஸ்தான் ஒரே குரூப், ஏன் தெரியுமா – ஐசிசியின் பக்கா பிளான்!
அப்போது, ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, துணை முதல்வர் நாராயண சாமி, எம்பி பத்திரெட்டி மிதுன் ரெட்டி ஆகியோர் இருந்தனர். இது குறித்து ஒய்எஸ்ஆர் காங்கரிஸ் கட்சி தனது எக்ஸ் பக்கத்தில், கூறியிருப்பதாவது: அம்பாதி ராயுடு, முதல்வர் ஜெகன்மோகன் முன்னிலையில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டி20 உலகக் கோப்பை தொடருக்கான அட்டவணை வெளியீடு – குரூப் சுற்றில் இந்தியா – பாகிஸ்தான் பலப்பரீட்சை!
இந்த நிலையில் தான் கட்சியில் இணைந்து 10 நாட்கள் கூட முழுமையாக ஆகாத நிலையில் இன்று காலை அம்பதி ராயுடு தனது எக்ஸ் பக்கத்தில் அதிர்ச்சியான தகவல் ஒன்றை குறிப்பிட்டிருக்கிறார். அதில், ஒய்.எஸ்.ஆர்.சி.பி கட்சியில் இருந்து விலகவும், அரசியலில் இருந்து சிறிது காலம் ஒதுங்கவும் முடிவு செய்துள்ளேன் என்பதை அனைவருக்கும் தெரிவிக்கவே இது. மேலும் நடவடிக்கை குறித்து உரிய நேரத்தில் தெரிவிக்கப்படும். நன்றி என்று குறிப்பிட்டுள்ளார்.
